வியாழன், 20 டிசம்பர், 2007

எத்தனை பாலின்ட்ரோம்கள்?..குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு-3

குட்டீஸ்!!!!!!

பாலின்ட்ரோம் [palindrome] என்பது முன் பின்னாக படிக்கும் போது ஒரே மாதிரி இருக்கும் சொல்லோ ,சொற்றொடரோ,எண்களோ ஆகும்.
உதாரணமாக
தமிழில்: விகடகவி
ஆங்கிலத்தில்: Madam I'm Adam
A man,a plan,a canal,Panama
Was it a cat I saw?


சரி இப்ப என்னுடைய கேள்வி :

ஒரு டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 8:08 என்றால் அடுத்த 62 நிமிடத்திற்குள் அந்த கடிகாரம் எத்தனை பாலின்ட்ரோம் எண்களைக் காட்டும்?
ஆரம்பிக்கும் எண்ணையும் கணக்கில் கொள்ளவும்.

ஈ*ஈ*ஈ*....[குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு..2]

குட்டீஸ்!!!!!!!!!!!

கீழே உள்ள ஒன்பதுக்கு ஒன்பது கட்டத்தில் ஒன்பது ஈக்கள் உள்ளது.
அவை ஒவ்வொன்றும் நேராகவோ, பக்க வாட்டிலோ, மேல்,கீழாகவோ, குறுக்கு வாட்டிலோ இரட்டை ஆகாமல் [ஒரே நேர்க்கோட்டில் வராமல்] தனித்தனியாய் இருப்பதைப் பாருங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது இதில் மூன்று ஈக்களை மட்டும் இடம் மாற்றி வைக்கனும்.




அப்படிச் செய்த பிறகும் எந்த இரண்டு ஈக்களும் நேராகவோ இட வலமாகவோ மேல்கீழாகவோ குறுக்காகவோ ஒரே நேர்க் கோட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் விதி.





என்ன சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர்களா ? முடிந்தவரை பெரியவங்க ஆலோசனை இல்லாம நீங்களே முயற்சி செய்யுங்க.



விடை அடுத்த பதிவில் சரி பார்த்துக் கொள்ளுங்க.


கட்டம் எண்ணைக் குறிப்பிட்டும் எங்கிருந்து எங்கு நகர்த்தலாம் என பின்னூட்டம் தரலாம்.


குறிப்பு:குட்டீஸ்கார்னர் என்ற புதிய வலைப் பூ உருவாகி இருப்பதால் குழப்பம் தவிர்க்க வேண்டி இன்று முதல் இந்த வலைப் பூ 'குட்டீஸ்ஜங்ஷன்' என்பது 'அரும்புகள்'' என்ற பெயரில் வரும்.


*
*






விடை கீழேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*





திங்கள், 17 டிசம்பர், 2007

குட்டீஸ் சாண்டா செய்வோமா.............

குட்டீஸ்

இந்த கிறுஸ்துமஸ்க்கு நீங்களே அழகான அழகான சாண்டா
செய்து பார்க்கலாம் வாருங்கள்.

தேவைப் படும் பொருட்கள்:

முட்டை ஓடு
பவுண்டேஷன்[ஃபேஸ் கிரீம்]அல்லது ரோஸ் பவுடர்
பஞ்சு
சிவப்பு நிற வெல்வட் அல்லது வழவழப்பு பேப்பர்
கறுப்பு மற்றும் சிகப்பு ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கள்
சலோபன் நாடா
கம் அல்லது க்ளூ



முதலில் முட்டை ஓட்டில் மிகச் சிறிய துளையிட்டு அதில் உள்ள மஞ்சள்,,வெள்ளைக் கருவை வெளியில் கொட்டி விட்டு கழுவி காயவைக்கவும்.அதன் மீது பவுண்டேஷன் அல்லதுரோஸ் பவுடர் கொண்டு தேய்த்து பிங்க் நிறம் கொண்டடு வரவும்.


பிற்கு பஞ்சை நீளவாக்கில் கட் செய்து முட்டை ஓட்டின் கீழ்ப் பகுதியில் பசை தடவி மீசை போல் ஒட்டவும்.இரு சிறிய துண்டுகளை வெட்டி புருவம் போல் ஒட்டவும்.இரு பக்க வாட்டிலும் பஞ்சை ஒட்டவும்.

கறுப்பு பொட்டை இரு கண்களுக்குவ்வைத்து ஒட்டவும்.சிகப்பு நாடா அல்லது பேப்பரை கூம்பு வடிவில் செய்து தலையில் தொப்பி போல் வைத்து பசை அல்லது செல்லோ நாடா கொண்டு ஒட்டவும்.

அதில் ஒருதுண்டை மூக்காகவும் உதடாகவும் ஓட்டவும்.

மேலும் சிறிது பஞ்சை தாடி போல் ஒட்டித் தொங்க விடவும்.


தொப்பியில் இரு துளையிட்டு பக்கவாட்டிலிருந்து ஒரூகம்பியை பஞ்சு சுற்றி தொங்க விடவும்.


இதோ சாண்டா கிளாஸ் ரெடி

இனி என்ன கிறுஸ்துமஸ் மரத்தில் கட்ட வேண்டியதுதானே.

ஞாயிறு, 16 டிசம்பர், 2007

கை நாட்டு இல்லை கலை வண்ணம் [குட்டீஸ்:விடுமுறை குறிப்புகள்]

குட்டீஸ்!

கை விரலில் மை தடவி காகிதத்தில் வைப்பவர்களை
'கை நாட்டு'ன்னு தானே சொல்வாங்க.
ஆனா அக்கா சொல்ற மாதிரி செய்தால் 'கலை வண்ணமாக' மாறுவதோடு வரப் போகும்'கிறுஸ்துமஸ்''புத்தாண்டுக்கு' நீங்களே அழகான வாழ்த்து அட்டை தயாரித்து உங்க நண்பர்களுக்கு கொடுக்கலாம்.அத்துடன் விடுமுறையும் பயனுள்ளதாக இருக்கும்.சரியா?



படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.

தேவையான பொருட்கள்:

பேப்பர் அல்லது சார்ட் அட்டை [வேண்டிய வண்ணத்தில்]
மை அட்டை[ink pad]
மார்க்கர் பேனா அல்லது கலர் ஸ்கெட்ச் பேனா[maker pen or color sketch pens]
பசை:[glue or gum]
ஜிகினாப் பொடி[glitter powder]
ஆர்வமும்,கற்பனா சக்தியும்

செய்முறை:
1.கை விரல்களை மை அட்டையில் வைத்து தேய்த்துப் பின் பேப்பரில் வைத்து கை நாட்டு போல் வைக்கவும்.

2.எது மாதிரி வரையப் போகிறோமோ அதற்குத் தகுந்தபடி நேராகவோ,வலது,இடது புறமாகவவோ விரல் அடையாளத்தைப் பதிய வேண்டும்.

இது ஓவியத்தின் தலைப் பகுதியாகவும் அல்லது உடலாகவும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

3.மை அடையாளம் [print] அளவுக்கு ஏற்ப எந்த விரலிலும் மை தடவிப் பயன் படுத்தலாம்.
4.சிறிது நேரம் மை அடையாளம் காய வேண்டும்.[குட்டீஸ் அதற்குள் கையை சோப் போட்டு கழுவிக் கொள்ளலாம்]

5.பின் கலர் அல்லது மார்க்கர் பேனாவால் படத்தின் கண்,காது ,வால் என தேவைப் படும் பகுதிகளை வரைய வேண்டும்.

6.விருப்பமானால் பசை தடவி படத்தைச் சுற்றி அழகிய ஜமிக்கி,மணிகள் ,செயற்கைக் கற்கள் ஒட்டலாம்.ஜிகீனாத் தூளும் [glitter powder] தூவலாம்.

7.இப்போது நீங்களே வரைந்த அழகான புதுமையான விரல் ரேகைப் படம் [finger print drawing]தயார்.

வழி எங்கே?... போகனும் அங்கே..விடுமுறை விளையாட்டு..1

வணக்கம் குட்டீஸ்!

இன்னும் கொஞ்ச நாள்ல கிறுஸ்துமஸ் விடுமுறை வருதில்லையா?

அப்ப பொழுது போகாம போரடிச்சி இருப்பீங்க.ஒரே விளையாட்டை எத்தனை முறைதான் விளையாடுவது.
அதனால அக்கா இங்கே ஒரு படம் போட்டிருக்கேன்.அது மேலே எலிக் குட்டிய [மவுஸ்]வைத்து சொடுக்கினா பெரிதாகும்.

அங்கே 'ஸ்டார்ட்' னு ஆரம்பிச்ச இடத்திலிருந்து 'ஃபினிஷ்' வரை உங்க எலிக்குட்டியை [மவுஸை ] நகர்த்திக் கிட்டு வாங்க.

ஒரே ஒரு சரியான பாதைதான் இருக்கு.தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தா நீங்க ஏப்ரல் முட்டாளாக மாறவும் வாய்ப்பிருக்கு.நிறைய தடைகளும் இருக்கு.

ஆனால் நீங்கதான் புத்திசாலிகளாச்சே நிச்சயம் வெற்றி பெறுவீங்க.

இந்த படத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் பென்சிலின் உதவியோடு வழி கண்டு பிடிக்கலாம்.

முயலுங்கள் !வாழ்த்துக்கள்!!.


வெள்ளி, 14 டிசம்பர், 2007

உலகின் மிகப் பெரிய ராட்சத உயிரினம்

அன்பு குழந்தைகளுக்கு அக்காவின் வணக்கம்
அக்காவுக்கு கொஞ்சம் வேலை அதிகம்.நீங்களும் பரீட்சை அது இதுன்னு பிஸியா இருப்பீங்கதானே.

உலகின் மிகப் பெரிய ராட்சத உயிரினம்[living organism] எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.

என்ன நீலத் திமிங்கலமா..[bluewhale].இல்லையே..அது விலங்கினத்தில் மிகப் பெரியதுதான்னாலும்,
நான் சொல்லப் போகும் உயிரினம் தாவரவகையைச் சேர்ந்தது.

அதன் பேர் ஹனி மஷ்ரூம்[honey mashroom]..


நேத்து பெய்த மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளான் னு சொல்லுவாங்கல்லே..அந்த வகையைச் சேர்ந்ததுதான் ஹனி மஷ்ரூம்.

நிலப் பரப்பில் இர்ருந்து மூன்று அடி ஆழத்தில் காணப்படும் இது சுமார் 3.5 மைல் நீளத்திற்கு [கிட்டத்தட்ட 2200 ஏக்கர் பரப்பளவிற்கு] பரந்து காணப்படும்.
இது 1000 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை உள்ளடக்கியதாம்.
அமெரிக்காவில் கிழக்கு ஓரிகன் மாநிலத்தில் காணப்படும் இந்த ராட்சத காளான் ஆர்மில்லாரியா ஆஸ்டோயா எனப்படும் பூஞ்சை வகையைச் சார்ந்தது.இதுவே உலகின் மிகப் பெரிய உயிரினம்.


இது மரங்களின் வேர்களில் உள்ள நீரையும் சத்துக்களையும் உறிஞ்சி உயிர் வாழக்கூடிய ஒரு ஒட்டுண்ணி வகை உயிரினம்.

ஓரிகன் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காடுகளில் மரங்கள் அழிந்ததைக் கண்டு ஆராய்ந்த பிறகே இந்த ஹனி காளான் இருப்பது கண்டறியப்பட்டது.சுமார் 2400 வருடங்களுக்கு முந்தைய இது 7200 ஆண்டுகள் வரையிலும் இருக்கக்கூடியதாம்.
எடையளவில் 650 டன் இருக்கும் இது ஒரே ஒற்றை உயிரினமாகக் கருதாப்பட்டால் உலகின் மிகப் பெரிய உயிரினம் இதுதான்.
வாஷிங்டன் [1500 ஏக்கர்],மிச்சிகன்[37 ஏக்கர்] பகுதியிலும் இதே வகை ராட்சத காளான் கண்டு பிடிக்கப் பட்டாலும் ஓரிகன் மாநிலத்தில் இருப்பதே பரப்பளவில் பெரியது.

வியாழன், 8 நவம்பர், 2007

குட்டிஸ்களின் தீபாவளி வாழ்த்துக்கள்

எல்லார்த்துக்கும் திபாவளி வாழ்த்துக்கள்

நாம வெடிக்கிற பட்டாசு இது மாதிரி சின்ன சின்ன குட்டீஸ்களின் உழைப்புல வந்ததுங்கறத நாம மறக்காம, அவர்களின் நல்வாழ்வுக்கு எங்கள் குட்டீஸ்களின் பிரார்த்தனை. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மாதினி, அவந்திகா, பேபி.பவன், நிலா பாப்பா,

கண்மணி அக்காவின்
தீபாவளி வாழ்த்துக்கள்

வியாழன், 18 அக்டோபர், 2007

வாழ்த்துக்கள் அவந்தி அக்கா


குட்டீஸெல்லாம் சேர்ந்து அவந்தி அக்கா பிறந்தநாளுக்கு

டேன்ஸ் ஆடறாங்க பாருங்க.


பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்க அன்பு அவந்தி அக்காவுக்கு..

(ஹேப்ப்பி பர்த்டே டு யூ ராகத்தில் பாடி இருக்கோம்.)

திங்கள், 15 அக்டோபர், 2007

சாப்பாட்டுக்குப் பின் செய்யக்கூடாதவை ஏழு...

.

அன்பான குட்டிகளுக்கு உங்களுக்கு ஒரு ....இல்லை யில்லை ஏழு செய்யாதே கட்டளைகள்...உங்க அண்ணா அக்கா எல்லோருக்கும் சொல்லுங்களேன்.

7 dont's after a meal:

1* Don't smoke-
[for elders]

Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).


2* Don't drink tea -

Because tea leaves contain a high content of acid. This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

3* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.


4* Don't loosen your belt -

Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.

5* Don't bathe -

Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.

6* Don't walk about -

People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

7* Don't sleep immediately -

The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine.

இந்த தகவல்கள் ஒரு மின்னஞ்சலாக எனக்கு வந்தவை.இது முன்பே பதிவிடப்பட்டதா எனத்தெரியவில்லை.இருப்பின் அந்த பதிவர் மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம்.மேலும் இதில் உள்ள கருத்துக்கள் ஆதாரபூர்வமானவையா என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது.அனுபவ ரீதீயாக பெரும்பாலும் சரியானாதே




நன்றி:வித்யாகலைவாணி

திங்கள், 1 அக்டோபர், 2007

சுருள் படங்கள் செய்வோமா?

படம் வரைந்து சலிப்பாக இருக்கின்றதா?

வாருங்கள் ஒரு புது வகையான வரையும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்





  • வர்ண காகிதங்கள்

  • தூரிகை/பென்சில்











முதலில் ஒரு வர்ண தாளை எடுத்து அதை 1 cm அகலத்திற்கு வெட்டி கொள்ளவும் .







தூரிகை எடுத்துக் கொள்ளுங்கள்.வெட்டிய தாளை அதன் பிடியில் இறுக்கமாக சுருட்டி கொள்ளவும்













முழுமையாக சுற்றி முடித்த பின் தூரிகையை வெளியே எடுத்து விடுங்கள்
இப்பொழுது உங்களுக்குப் படத்தில் காட்டப்படுள்ளது போல சுருள் தாள் கிடைக்கும்.


இதே மாதிரி பல வண்ணங்களிலும்,அகலங்களிலும் சுருள் தாட்களை தயாரிக்கலாம்













நீங்கள் நீண்ட காகிதங்களை உபயோகித்தால் இன்னும் நீண்ட சுருள்கள் கிடைக்கும்





இந்த படத்தில் உள்ள நீல தாள் பாதி அளவிற்கு மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு
இந்த மாதிரி நேர்தியான தாள்,இறுதியில் மட்டுமே சுருளுடன் கிடைக்கும்.இது ஒரு வகை சுருள்




அடுத்த முறை தாளின் இருப்பக்கமும் சுருள் இருக்கும்.இப்படி செய்ய அதன் இறுதியில் மட்டும் தூரிகையால் சுருட்ட வேண்டும்,பிறகு இதே மாதிரி அடுத்த இறுதியையும் சுருட்ட வேண்டும்




சரி இப்படி சுருட்டிய தாட்களை வைத்து என்ன செய்வது?படங்களைப் பாருங்கள்.இந்த மாதிரி சுருள்களை வைத்து அதை ஒட்டி இந்த மாதிரி புதுவகையான படங்களை நீங்களும் தயாரிக்கலாம். முயன்று பாருங்கள்.வாழ்த்துக்கள்







நன்றி:ART ATTACK



வெள்ளி, 21 செப்டம்பர், 2007

அமிலமழைன்னா என்ன தெரியுமா?

அன்பான குழந்தைகளே

உங்களுக்கெல்லாம் அமிலமழைன்னா என்னன்னு தெரியுமா?
அதுக்கு முன்பாக அமிலத்தன்மைன்னா என்ன காரத் தன்மைன்னா என்னன்னு பார்ப்போம்.
ஒரு திரவம் அல்லது கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் மதிப்பைக் கொண்டே அதன் அமிலத் தன்மை அறியப் படுகிறது.
இதை pH என்ற அளவால் குறிப்பிடுகிறோம்.

pH= -log10^H+

அதாவது ஒரு கரைசலின் ஹைடரஜன் அயனிச் செறிவினுடைய 10 அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மறை எண்ணாகும்.[negative logrithm to the base 10 of hydrogen ion concentration]
இப்படி பத்தின் ம்டங்காக இருப்பதால் ஒரு அலகு [unit]pH மாற்றம் என்பது முன்னயதைவிட பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.
இனி சில பொருட்களில் உள்ள அமிலத்தன்மையைப் பார்ப்போம்.


[படத்தின் மீதுகிளிக்கிப் பார்க்கவும்[

pH மதிப்பு

7 என்பது நடுநிலைக் கரைசலையும்
<7 என்பது அமிலக் கரைசலையும்
>7 என்பது காரத்தன்மையையும் குறிக்கும் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

சாதாரண மழை நீரின் pH மதிப்பு 5.6. ஆனால் சுற்றுச் சூழல் மாசு படுதலால் வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு [C02] மழை நீருடன் சேர்ந்து கார்பானிக் அமிலமாக மாறும்போது மழை நீரில் pH குறைந்து அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இதைத்தான் அமில மழை என்கிறோம்.
இது மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் சேரும் நைடஜன் -டை-ஆக்ஸைடு ,கந்தக -டை-ஆக்ஸைடும் மழை நீருடன் அமிலமாக மாறுவதால் அமிலமழை பெய்கிறது.இது பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு பளிங்கினால் கட்டப் பட்ட பெரிய கட்டிடங்கள்,நினைவுச் சின்னங்களையும் சிதிலமடையச் செய்கிறது.

செவ்வாய், 18 செப்டம்பர், 2007

உருண்டைப் பறவை- குட்டிஸ் கதை

ஒரு ஊர்ல ஒரு அதிசியமான உருண்டை பறவை இருந்துச்சு. பறவைன்னா பறக்கனும் இல்ல குட்டீஸ். ஆனா இந்த பறவையினால பறக்க முடியாது.
அதுக்கு ஒரே கவலை. ஏதுனாச்சும் பண்ணி பறந்தே ஆகனும்னு உருண்டை பறவைக்கு.

அதுக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுத்துச்சு.

மரத்து மேல கஷ்டப்பட்டு ஏறுச்சு. பறந்து போய் உக்கார முடியாது இல்ல.

மரத்துமேல உக்கார்ந்து அதோட ரெக்கையை அடிச்சு பறக்க முயற்சி செய்துச்சு

ஆனா அதுனால பறக்க முடியலை. தொப்புன்னு கூழ விழுந்துறுச்சு

ஆனா பாருங்க குட்டீஸ் கீழ விழுந்தாலும் அதுக்கு அடி படலை. மரத்து மேல ஏறதுக்கு முன்னாடியே கீழ இலை எல்லாம் பரப்பி வச்சுறுச்சு. அதனால கீழ விழுந்தாலும் அடி படலை.

அப்புறம் தான் அதுக்கு புரிஞ்சது. எல்லாப் பறவைகளும் உருண்டையா இருக்காது. உருண்டையா இருக்குறது தான் இந்தப் பறவையோட சிறப்பு.

அது மாதிரி பறக்குறதும் சில பறவைகளின் சிறப்பு. அது புரிஞ்ச பின்னாடி தேவையில்லாம அந்த முயற்சி செய்யறதை நிறுத்திருச்சு.

குட்டீஸ் அதனால ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும் திறமையை தெரிந்து அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

வியாழன், 13 செப்டம்பர், 2007

சின்னதா இருக்கப்பவே திருத்திக்கனும் - குட்டீஸ் கதை



ஒரு ஊர்ல ரொம்ப குறும்பு பண்ணீட்டு இருந்த ஒரு பையனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல இருந்த தாத்தா ஒருவர் கிட்ட சொன்னார். '' இவன ரொம்ப சோம்பேரி. என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்த மாட்டேங்குறான். நீங்க தான் அவன திருத்தனும்'' னு சொன்னார்.

தாத்தா அவனை ஒரு காட்டுக்கு கூப்புடுட்டு போனார். அங்க இருந்த ஒரு குட்டி செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப ஈசியா பிடிங்கிட்டான்.

அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.

இன்னும் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னப்போ ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைப்பா ஆயிட்டான்.

அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.

தாத்தா சொன்னார், '' இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே'' னு சொன்னார்.

பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.

புதன், 12 செப்டம்பர், 2007

எந்த எண்ணையும் சுலபமாய் ஒன்பதால் பெருக்கலாம்

அன்புக் குழந்தைகளே

பெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.
சின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!

செய்ய வேண்டியது:

1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.

2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.

3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.

4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.

என்ன குழம்புகிறதா?

உதாரணமாக 9x4=36

படத்தில் உள்ளது போல




உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]

3...6..=36 தான் விடை

இன்னொரு கணக்கு 9x7=63 இந்த விடை எப்படி வந்தது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?

ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

பத்து இல்லையெனில் பத்தாது.............


ஹலோ குட்டீஸ்!

இதோ உங்களுக்காக சின்னதாய் பத்து முத்தான விஷயங்கள்



The Most Selfish " 1 " letter word.

" I " ---> Avoid It

The Most Satisfying " 2 " letters word.

" We " ---> Use It..

The Most Poisonous " 3 " letters word.

" Ego" ---> Kill It..

The Most Used " 4 " letters word.

" LOVE " --> Value It.

The Pleasing " 5 " letters word.

" SMILE " -->Keep It.

The Fastest Spreading " 6 " letters word.

" RUMOUR " --> Ignore it..

The Hardest working " 7 " Letters Word.

"SUCCESS " --> Achieve it..

The Most enviable " 8 " letters word.

" JEALOUSY " --> distance It..

The Most Powerful " 9 " word letters word.

" KNOWLEDGE " --> Acquire It.

The Most essential " 10 " letters word

" CONFIDENCE " -- > "Trutst It.


டிஸ்கி: ஒரு நண்பரின் மெயிலிலிருந்து.......

நண்பருக்கு நன்றி.








வியாழன், 6 செப்டம்பர், 2007

குட்டீஸ் இங்க பாருங்க Something interesting


a, b, c & d - இந்த நான்கு எழுத்துக்களும் ஒன்றில் இருந்து 99 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் ( spellings) எங்கும் வருவதில்லை. முதல் தடவையாக ''Hundred'' என்ற வார்த்தையில் வருகிறது.

a, b & c எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக ''Thousand'' என்ற வார்த்தையில் வருகிறது.

B & C எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999,999,999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக Billion என்ற வார்த்தையில் வருகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் 'C' எழுத்து எந்த எண்ணின் ஸ்பெல்லிங்கிலும் இல்லை.

செவ்வாய், 4 செப்டம்பர், 2007

ஆசிரியர் தினம் - குட்டீஸின் வணக்கங்கள்






நாம இப்போ யாராயிருந்தாலும் அதுக்கு முக்கிய காரணாயிருக்கறவுங்க நம்ம ஆசிரியர்கள்.





மேல படத்துல இருக்குறது யாருன்னு தெரியுதா குட்டீஸ். இவர் தான் ஓமர் முக்தர். The Lion of the Desert என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். எங்க மேக்ஸ் சார் எப்பவும் இவர பத்தி சொல்லுவார். லிபியா நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டவர். இத்தாலிக்கு எதிரா போரிட்டு அவர்களுக்கே ஒரு நடுக்கம் வர வைத்தவர். இவர் ஒரு ஸ்கூல் டீச்சர். அவரோட வழி நடத்தலும், நம்பிக்கையும் தான் அவரோட இருந்தவங்களுக்கு டானிக். அவரைப் பொருத்தவரைக்கும் முதலில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தப்டி நடக்க வேண்டும்.


எல்லா ஆசிரியர்களுக்கும் இன்னைக்கு என்னோட வணக்கத்தையும் நன்றியையும் உங்க எலலார் சார்புலேயும் சொல்லிக்குறேன்.


தருமி ஐயா, கண்மணி அக்கா, காயத்திரி அக்கா அவர்களுக்கு என் வணக்கங்கள். எல்லா குட்டீஸ்க்கு உங்கள் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் வேண்டி


அவந்திகா


netoops blog