Wednesday, February 23, 2011

நாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு

குட்டீஸ்
காலண்டர் [நாட்காட்டி]வைத்து ஒரு சின்ன கணக்குப் புதிர் போட்டு உங்க நண்பர்களை அசத்துங்க‌


இப்படி ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க நண்பரிடம் ஒரு சதுர அமைப்பில் உள்ள ஏதேனும் நாலு எண்களை மனதில் நினைத்துக் கொள்ளச் சொல்லுங்க‌
படத்தில் உள்ளது போல நான்கு எண்களும் சதுர அமைப்பில் இருக்க வேண்டும்.பின்னர் அவர் மனதில் நினைத்துக் கொண்ட எண்களின் கூட்டுத் தொகையை மட்டும் உங்களிடம் சொல்லும்படி கேளுங்கள்.


அதிலிருந்து அவர் எந்த நாலு எண்களை மனதில் நினைத்தார் என்பதை நொடியில் சொல்லி விடலாம்.

உதாரணமாக படத்தில் உள்ள சதுரத்தின் கூட்டுத் தொகை=80 [16+17+23+24=80]
ஒரு சின்ன பார்முலா [சூத்திரம்] சதுரத்தின் முதல் எண்ணை n ஆக வைத்துக் கொண்டு அடுத்த‌து n+1 n+7 n+8 ஆக
                       n+n+1+n+7+n+8=(4n+16)  = 80
                                                           4n  = 80-16 =64
                                                                          n=64/4 =16

16 னு ஒரு எண் தெரிந்து விட்டால் 17,23,24 என சதுரத்தின் மற்ற எண்களைச் சொல்லி விடலாம்.


சின்ன அல்ஜிப்ரா கணக்குத்தான்.விளக்கம் தான் பெரிது.மனக் கணக்காப் போட்டா எளிதாகச் சொல்லி விடலாம்.

அதுசரி 16 கண்டுபிடிச்சா அது [16,17,23,24] ஆக இல்லாமல்
[16,17,9,10]      [16,15,8,9]        [16,15,22,23]
 
என எந்தச் சதுர அமைப்பு வேண்டுமானாலும் இருக்கலாமேன்னு சந்தேகம் வருதா? வரக்கூடாதே.....ஏன்னா கூட்டுத் தொகைக்கும் அது ஒத்து வர வேண்டும் சரிதானே...




எங்கே ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க மாய வித்தையைக் காட்டுங்க...இப்போ பரிட்சை நேரமில்லையா?எல்லாம் முடிந்து விடுமுறையில் விளையாடுங்க...:))



6 comments:

  1. டீச்சர்! சூப்பர், படிச்சுட்டு கிளாஸ்ல எல்லார் கிட்டயும் மாஜிக் செஞ்சு காமிச்சிடுறேன். நன்றி! இப்படிக்கு அபி

    ReplyDelete
  2. டீச்சர்! சூப்பர், படிச்சுட்டு கிளாஸ்ல எல்லார் கிட்டயும் மாஜிக் செஞ்சு காமிச்சிடுறேன். நன்றி! இப்படிக்கு அபி

    ReplyDelete

netoops blog