Sunday, February 10, 2008

குட்டீஸ்:புதிர்.....போடலாமா?



ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஆங்கில வார்த்தை.அப்படியே சொன்னால்பெண்களுக்கு பிடித்த அணிகலன்.
கடைசி எழுத்து நீக்கினால் ஒரு பழத்தின் பெயர்.
முதலும் கடைசி எழுத்தும் நீக்கினால் கேட்க முடியும்
அது என்ன?



இது ஒரு ஏழு எழுத்து ஆங்கில வார்த்தை.கடைசி மூன்று எழுத்துக்களை நீக்கினால் ஆடவர் அணியும் உடை.
கடைசி நான்கு எழுத்துக்கள் நீக்கினால் பெண்கள் சமைக்கப் பயன் படுத்தும் பாத்திரம்
முதல் நான்கு எழுத்துக்கள் நீக்கினால் பெண்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்.
அது என்ன?

ஒரு பண்ணையில் பல விலங்குகள் இருந்தன.எவை எவை எத்தனை எனக் கேட்டபோது பண்ணைக்காரன் சொன்னான்
''எல்லாமே குதிரைகள் இரண்டைத் தவிர
எல்லாமே ஆடுகள் இரண்டைத் தவிர
எல்லாமே கழுதைகள் இரண்டைத் தவிர''

அப்படியானால் அவனிடம் இருந்த விலங்குகள் என்ன்னென்ன?எத்தனை?
இந்த படத்தோடு சம்மந்தப் பட்ட கணித வார்த்தை என்னங்க


answer:

*
*
*
*
*
*
*
*
* வெயிட்டீஸ்..விடை இங்கதான் இருக்கு.முதல்ல நீங்களே கண்டுபிடிங்க.பிறகு சரி பாருங்க.அதுவரை கண்ணுக்குத் தெரியாது.

1.PEARL
2.PANTHER
3.ONE HORSE;ONE DONKEY;ONE GOAT [TOTAL 3]
4.SQUARE ROOT

தாடியும்...தூக்கமும்

குட்டீஸ்!
உங்களுக்கெல்லாம் கதை சொல்லி நிறைய நாளாச்சு இல்லையா?
ஒரு ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார்.அவர் ரெண்டு விஷயங்களில் தன்னைப் பற்றிப் பெருமை பட்டுக்குவார்.

ஒன்று அவருடைய நீண்ட தாடி பற்றிய பெருமை.வெண்மை நிறத்தில் அவருடைய காலைத் தொடுமளவுக்கு நீண்ட தாடி அவருக்கு.
அடுத்தது படுத்தவுடன் தூங்கிப் போகும் அவருடைய பழக்கம் பற்றியது.


யாரிடம் பேசினாலும் இதைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.
இந்த இரண்டு விஷயங்களிலும் தன்னையாரும் மிஞ்ச முடியாது என சொல்வார்.
ஒரு நாள் அவருடைய பேரன் ஊரிலிருந்து வந்திருந்தான்.

அவனிடமும் தாத்தா இது பற்றி பேசினார்.
பேரன் 'சரி தாத்தா.நீங்க தூங்கும் போது உங்க நீண்ட தாடி போர்வைக்கு மேலே இருக்குமா இல்லை போர்வைக்கு அடியிலா?' என்று சந்தேகம் கேட்க

படுத்தவுடனே தூங்கிப்ப் போகும் பழக்கத்தால் தாத்தாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
இன்று தூங்கும் போது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
இரவு தூங்கும் போது போர்வைக்கு அடியில் தாடி இருக்க வெளியே தெரியட்டும் என்று அதை எடுத்து போர்வைக்கு மேலே போட்டார்.

அது பார்ப்பதற்கு நன்றாக இல்லாததால் மீண்டும் எடுத்து போர்வைக்கு அடியில் போட்டார்.
மீண்டும் சரி வராததால் மேலேயும் மறுபடி கீழேயும்........இப்படியே போர்வைக்கு மேலே...கீழே என்று மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டே இருந்ததில் அன்று இரவு தூங்கவேயில்லை.

மறுநாளும் இப்படி முயற்சித்து தூக்கம் தொலைக்கவே மனம் வெறுத்துப் போன தாத்தா தாடியா?தூக்கமா? னு யோசித்து முடிவில் தன்னுடைய நீண்ட தாடியை வெட்டி விட்டார்.

பிறகென்ன?தாடி பத்தின கவலை இல்லாம நிம்மதியாத் தூங்கத் தொடங்கினார்.ஹாஹா...
netoops blog