இந்த கிறுஸ்துமஸ்க்கு நீங்களே அழகான அழகான சாண்டா
செய்து பார்க்கலாம் வாருங்கள்.
தேவைப் படும் பொருட்கள்:
முட்டை ஓடு
பவுண்டேஷன்[ஃபேஸ் கிரீம்]அல்லது ரோஸ் பவுடர்
பஞ்சு
சிவப்பு நிற வெல்வட் அல்லது வழவழப்பு பேப்பர்
கறுப்பு மற்றும் சிகப்பு ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கள்
சலோபன் நாடா
கம் அல்லது க்ளூ
முதலில் முட்டை ஓட்டில் மிகச் சிறிய துளையிட்டு அதில் உள்ள மஞ்சள்,,வெள்ளைக் கருவை வெளியில் கொட்டி விட்டு கழுவி காயவைக்கவும்.அதன் மீது பவுண்டேஷன் அல்லதுரோஸ் பவுடர் கொண்டு தேய்த்து பிங்க் நிறம் கொண்டடு வரவும்.
பிற்கு பஞ்சை நீளவாக்கில் கட் செய்து முட்டை ஓட்டின் கீழ்ப் பகுதியில் பசை தடவி மீசை போல் ஒட்டவும்.இரு சிறிய துண்டுகளை வெட்டி புருவம் போல் ஒட்டவும்.இரு பக்க வாட்டிலும் பஞ்சை ஒட்டவும்.
கறுப்பு பொட்டை இரு கண்களுக்குவ்வைத்து ஒட்டவும்.சிகப்பு நாடா அல்லது பேப்பரை கூம்பு வடிவில் செய்து தலையில் தொப்பி போல் வைத்து பசை அல்லது செல்லோ நாடா கொண்டு ஒட்டவும்.
அதில் ஒருதுண்டை மூக்காகவும் உதடாகவும் ஓட்டவும்.
மேலும் சிறிது பஞ்சை தாடி போல் ஒட்டித் தொங்க விடவும்.
தொப்பியில் இரு துளையிட்டு பக்கவாட்டிலிருந்து ஒரூகம்பியை பஞ்சு சுற்றி தொங்க விடவும்.
இதோ சாண்டா கிளாஸ் ரெடி
இனி என்ன கிறுஸ்துமஸ் மரத்தில் கட்ட வேண்டியதுதானே.
சூப்ப்பர்!! டீச்சர்
பதிலளிநீக்குநாளைக்கே செய்து பாத்திடுறென்..
இந்த கபீஷ் கதைகள் எல்லாம் போடமுடியுமான்னு பாருங்களேன்..பழைய பூந்தளிர் கிடைச்சதுன்னா ஸ்கென் பண்ணியாச்சும் போடலாம்..
பின் நவீனத்துவ வாதி அய்யனாருக்குள்ளும் ஒரு குழந்தை மனசா....கிரேட் யா....
பதிலளிநீக்குSuper Akka !!!1
பதிலளிநீக்குஆகா - சாண்டா கிளாஸ் அருமை
பதிலளிநீக்கு