Friday, December 14, 2007

உலகின் மிகப் பெரிய ராட்சத உயிரினம்

அன்பு குழந்தைகளுக்கு அக்காவின் வணக்கம்
அக்காவுக்கு கொஞ்சம் வேலை அதிகம்.நீங்களும் பரீட்சை அது இதுன்னு பிஸியா இருப்பீங்கதானே.

உலகின் மிகப் பெரிய ராட்சத உயிரினம்[living organism] எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.

என்ன நீலத் திமிங்கலமா..[bluewhale].இல்லையே..அது விலங்கினத்தில் மிகப் பெரியதுதான்னாலும்,
நான் சொல்லப் போகும் உயிரினம் தாவரவகையைச் சேர்ந்தது.

அதன் பேர் ஹனி மஷ்ரூம்[honey mashroom]..


நேத்து பெய்த மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளான் னு சொல்லுவாங்கல்லே..அந்த வகையைச் சேர்ந்ததுதான் ஹனி மஷ்ரூம்.

நிலப் பரப்பில் இர்ருந்து மூன்று அடி ஆழத்தில் காணப்படும் இது சுமார் 3.5 மைல் நீளத்திற்கு [கிட்டத்தட்ட 2200 ஏக்கர் பரப்பளவிற்கு] பரந்து காணப்படும்.
இது 1000 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை உள்ளடக்கியதாம்.
அமெரிக்காவில் கிழக்கு ஓரிகன் மாநிலத்தில் காணப்படும் இந்த ராட்சத காளான் ஆர்மில்லாரியா ஆஸ்டோயா எனப்படும் பூஞ்சை வகையைச் சார்ந்தது.இதுவே உலகின் மிகப் பெரிய உயிரினம்.


இது மரங்களின் வேர்களில் உள்ள நீரையும் சத்துக்களையும் உறிஞ்சி உயிர் வாழக்கூடிய ஒரு ஒட்டுண்ணி வகை உயிரினம்.

ஓரிகன் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காடுகளில் மரங்கள் அழிந்ததைக் கண்டு ஆராய்ந்த பிறகே இந்த ஹனி காளான் இருப்பது கண்டறியப்பட்டது.சுமார் 2400 வருடங்களுக்கு முந்தைய இது 7200 ஆண்டுகள் வரையிலும் இருக்கக்கூடியதாம்.
எடையளவில் 650 டன் இருக்கும் இது ஒரே ஒற்றை உயிரினமாகக் கருதாப்பட்டால் உலகின் மிகப் பெரிய உயிரினம் இதுதான்.
வாஷிங்டன் [1500 ஏக்கர்],மிச்சிகன்[37 ஏக்கர்] பகுதியிலும் இதே வகை ராட்சத காளான் கண்டு பிடிக்கப் பட்டாலும் ஓரிகன் மாநிலத்தில் இருப்பதே பரப்பளவில் பெரியது.

8 comments:

  1. அக்கா மிக்க நன்றி

    ReplyDelete
  2. Superb!!Kanmani...Thanku 4 posting this!!!Why u 4did not post anything 4past 2 months????We really felt bored!!!

    ReplyDelete
  3. ஹைய் பரணி[ப்ரனீ?] இந்து குழுவில் சேர விருப்பமா?நீங்களும் பதிவிடலாம்.
    நானும் என் குழு உறுப்பினர்களும் தேர்வு மும்மரத்தில் இருக்கோம்;)
    மெயில் ஐடி தரவும்.[டெலிட் செய்து விடுவேன்]

    ReplyDelete
  4. Informative....what about the coral reef in australia?

    ReplyDelete
  5. இது போல பல இடத்தில் பல உயிரினங்கள் [தாவரம்+விலங்கினம்]இருந்தாலும் இன்றுவரை ஹனி மஷ்ரூம் தான் ஜெயண்ட் சைஸ்.[ஆயிரம் ஃபுட்பால் கிரவுண்ட் பரப்பு னா சும்மாவா?]

    ReplyDelete
  6. can we eat these????

    ReplyDelete

netoops blog