அரும்புகள்

அரும்புகள்

மலரும் மொட்டுக்களுக்காக ஒரு தளம்

Thursday, September 3, 2009

பூப்பூவா.... பூத்திருக்கு

குட்டீஸ்
பூக்களையும் பூந்தோட்டத்தையும் யாருக்காவது பிடிக்காமல் போகுமா?
உங்க பூந்தோட்டத்தை நீங்களே உருவாக்கலாம்.
கீழே உள்ள சுட்டியைக் கிளிக்கிப் பாருங்க.
பூந்தோட்டம்
என்ன திரை வெறுமையா இருக்கா?
உங்க எலிக்குட்டியை அங்கு இங்கும் நகர்த்தி சொடுக்குங்க.
எத்தனை அழகான பூந்தோட்டம் நீங்களே உருவாக்கியது பாருங்க.
மகிழ்ச்சிதானே

Thursday, August 20, 2009

தொடர் எண்கள் புதிர்


1
11
21
1211
111221
312211
13112221
1113213211

இந்த வரிசையில் அடுத்து வரக்கூடிய வரிசை எண்களைக் கண்டு பிடியுங்கள்.
2
12
1112
3112
132112
1113122112
311311222112
இந்த தொடரிலும் அடுத்து வரக்கூடிய வரிசைஎண்களைக் கண்டுபிடியுங்கள்
கண்டுபிடித்து விட்டால்,இது போன்ற எண்களின் தொடர் வரிசையை நீங்களே உருவாக்கலாம்.எத்தனை வரிசைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம்.


புதிர் விடை:கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
ஹூம் ஹூம் சொல்ல மாட்டேன்.முயற்சி செய்யுங்கள்.மிக எளிதுதான்.இல்லையென்றால் பிறகு சொல்கிறேன்.