Saturday, January 19, 2008

குட்டீஸ்: கடிகாரங்கள் பலவிதம் காட்டும் நேரமோ ஒரே விதம்

குட்டீஸ்!
நீங்க நிறைய வகையான கடிகாரங்கள் பார்த்திருப்பீங்க.
இதற்கு மணற் கடிகாரம் னு பேர்.மேலே உள்ள மணல் கீழ்ப் பகுதிக்கு வரும் அதை வைத்தே அந்தக் காலத்தில் நேரத்தை கணக்கிடுவார்கள்.

அதற்கு பின்பு 1....12 வரை எண்கள் குறிக்கப் பட்ட 'அனலாக்' வகை கடிகாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

ரோமன் எழுத்துக்களால் ஆன வகையிது

எண்களே இல்லாமல் கோடுகள் அல்லது புள்ளிகளைக் கொண்டது

டிஜிட்டல் வகையான கடிகாரங்கள்

இது ஒரு வேதியியல் கடிகாரம் .அணு எண் 1 முதல் 12 வரை உள்ள தனிமங்களின் [elemets] குறியீடு[symbol] குறிக்கப்பட்ட இதற்கு 'கெம் டைம் கடிகாரம்'[chem time clock] னு பேர்.


கடிகாரங்களின் வகைகள் மாறினாலும் அவை காட்டும் நேரம் ஒரே மாதிரிதானே இருக்கும்.

Monday, January 14, 2008

குட்டீஸ்:கணக்கைப் போடுங்க பிறந்தநாள் கண்டுபிடிங்க.

குட்டீஸ்!!!!
உங்க எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் பரிசா உங்களுக்கு ஒரு புதிர் கணக்குச் சொல்லித்தரப் போறேன்.

உங்க நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடிக்கிற கணக்கு!

முதல்ல உங்க நண்பரை

1. அவருடைய பிறந்த நாளின் மாதத்தை 4 ஆல் பெருக்கச் சொல்லுங்க

2.விடையுடன் 13 ஐக் கூட்டச் சொல்லுங்க.

3.அதை 25 ஆல் பெருக்கச் சொல்லவும்.

4.வரும் விடையிலிருந்து 200 கழிக்கவும்.

5.அத்துடன் பிறந்த தேதியின் எண்ணைக் கூட்டச் சொல்லவும்.

6.அதை 2ஆல் பெருக்கி

7.அதிலிருந்து 40 ஐக் கழிக்கவும்.

8.மறுபடியும் 50 ஆல் பெருக்கி

9.அத்துடன் அவர் பிறந்த வருஷத்தின் கடைசி 2 எண்களைக் கூட்டச் சொல்லவும்.

10.ஹாஹா இனிதான் உங்க மேஜிக் ஆரம்பம்...இதுவரை அவர் கூட்டிக் கழித்து பெருக்கி முடித்த தொகையை மட்டும் சொல்லச் சொல்லவும்.

அதை வைத்து ஒரு சின்ன மேஜிக் செய்தால் அவ்ர் பிறந்த மாதம்,தேதி,வருஷம் எல்லாம் சுலபமாகச் சொல்லி விடலாம்.

அந்த மேஜிக் செய்யவும் ஒரு நெம்பர் தேவை அது என்னன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.

டிஸ்கி:சும்மா டெஸ்டுக்காக குட்டீஸ்களோ அல்லலது அவர்களின் அண்ணாக்களோ 9வது படியில் வந்த தொகையை மட்டும் சொல்லுங்க .அவங்க பிறந்த நாள் சொல்றேன்.

டிஸ்கி 2:இவ்வளவு கணக்கு போடுவதற்கு பதில் நானே பிறந்த நாள் சொல்லிடுறேன் என்று நண்பர் சொன்னால் அவர் கணக்கில் மந்தம் னு அர்த்தம் ஹாஹாஹா...

Friday, January 4, 2008

குட்டீஸ்: பேய் உருவங்கள் செய்வோமா? பயம் காட்டுவோமா?

குட்டீஸ்!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

இந்த கைவினைப் பொருட்கள் பகுதியில் உங்களுக்கு 'பயங்கரமான பேய் [ஆவி] பொம்மைகள் செய்யக் கத்துக் குடுக்கப் போறேன்.ஹ்ஹாஹ்ஹா.......


தேவையான பொருட்கள்:

பலூன்கள்
டிஷ்யூ பேப்பர் அல்லது வெள்ளை நிற கவரிங் பேப்பர்
நூல் கண்டு
மார்க்கர் பேனா அல்லது ஸ்கெட்ச் பேனா
ரப்பர் பேண்ட்



செய்முறை:
முதலில் பலூன் களை பெரிதாக ஊதி ரப்பர் பேண்ட் உதவியால் கட்டி வைக்கவும்.

பின்பு வெள்ளை ரேப்பர் பேப்பரை [கவரிங் பேப்பர்] விரித்து அதில் ஊதிப் பெரிதாக்கிய பலூனை வைத்து நன்கு மூடி [படத்தில் உள்ளது போல]மீண்டும் ரப்பர் பேண்ட் உதவியுடன் கட்டவும்.

மார்க்கர் அல்லது கலர் பேனாவினால் ஒவ்வொரு பேப்பர் சுற்றிய பலூன் மீதும் உருவங்களை வரையவும்.

நீண்ட நூலை எடுத்து பலூனுடன் கட்டப் பட்ட ரப்பர் பேண்ட் உடன் இணைத்துபறக்க விட்டால் பயங்கரமான பேய் பொம்மைகள் காற்றில் ஆடும்.

இரவில் அல்லது இருட்டு அறையில் தெரிய வேண்டுமானால் சாதாரண கலருக்கு பதில் 'க்ளோ' பெயிண்ட் அல்லது பேப்பர் ஒட்டி வெட்டினால் இருளிலும் உருவங்கள் தெரியும்.

குறிப்பு:உங்கள் நண்பர்கள் பிறந்த நாளான்று அல்லது முட்டாள்கள் தினத்தில் ஏமாற்றவோ மட்டுமே செய்து பார்க்கலாம்.
அடிக்கடி இப்படி செய்து பயம் காட்டக் கூடாது.சரியா?



Thursday, January 3, 2008

குட்டீஸ்!!!வேட்டையபுரம் அரண்மனையில் எத்தனை பொம்மைகள்

குட்டீஸ்!!!

ஒரு சின்ன கணக்கு.

சந்திரமுகியில் வந்த வேட்டையபுரம் அரண்மணை மாதிரி ஒரு பெரிய மாளிகை.அந்தமாளிகையில் 100 மாடிப்படிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு படியிலும் படியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொம்மைகள் வைக்கப் படுகின்றன.

உதாரணமாக முதல் படியில் 1 பொம்மை... இரண்டாவதில் 2 பொம்மைகள்... மூன்றாவதில் மூன்று பொம்மைகள்........50 வது படிக்கட்டில் 50 பொம்மைகள்.........இப்படியாக 100 வது படியில் 100 பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கின்றன.

முதல் படியிலிருந்து 100 வது படிவரை வைக்கப் பட்டிருக்கும் மொத்த பொம்மைகளின் எண்ணிக்கை எத்தனை ன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்.

இதென்ன கடினமான வேலையா ன்னு பேப்பரும் பேனாவும் வைத்து கூட்டலை ஆரம்பிக்கக் கூடாது.

மனக் கணக்காக நொடியில் சொல்ல என்ன வழின்னு சொல்லனும்.சரியா?

லக...லக...லக...லக....ரெடியா?
*
*
*
விடை கீழே.ஆனாலும் பார்க்காமல் முயற்சி செய்யுங்கள்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
விடை : இரண்டு இரண்டு படிகளாக ஜோடி சேர்த்துக் கூட்டவும்.உதாரணமாக

1+99=100
2+98=100
3+97=100.........
49+41=100 .....வரை கூட்டினால் மொத்தம் 4900 வரும்.
50 க்கும் 100 க்கும் ஜோடியில்லை
ஆகவே 4900+100+50=5050 பொம்மைகள்.


சூத்திரம்:n(n+1)/2

Tuesday, January 1, 2008

பூக்களில் உறங்கும் மெளனங்கள் - படம்

இனிமேல் எழுத மாட்டேனு சொல்லீட்டு மறுபடியும் வந்துட்டானு பார்க்கறீங்க தானே?...." அரும்புகள் " கண்மணி அக்காக்கு நன்றி சொல்ல.. என்னை இதுல சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி அக்கா..

Happy New Year to All

பூக்களில் உறங்கும் மெளனங்கள் னு எங்கேயோ ஒரு டைட்டில் பார்த்தேன்.. இந்த ஃபோட்டோ எல்லாம் பார்த்தப்போ எனக்கு இந்த தலைப்பு நியாபகம் வந்துச்சு... உங்களுக்கும் அப்படி தோனுதானு சொல்லுங்க..


இந்த குழந்தை இப்ப இல்ல..எச்ஐவி இன்ஃபெக்ஷனால இறந்துடுச்சு



Female Foeticide

Orphanage ல இருந்த பையன்

Refugee Camp ல இருந்த பொண்ணு

netoops blog