அன்பான குழந்தைகளே
உங்களுக்கெல்லாம் அமிலமழைன்னா என்னன்னு தெரியுமா?
அதுக்கு முன்பாக அமிலத்தன்மைன்னா என்ன காரத் தன்மைன்னா என்னன்னு பார்ப்போம்.
ஒரு திரவம் அல்லது கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் மதிப்பைக் கொண்டே அதன் அமிலத் தன்மை அறியப் படுகிறது.
இதை pH என்ற அளவால் குறிப்பிடுகிறோம்.
pH= -log10^H+
அதாவது ஒரு கரைசலின் ஹைடரஜன் அயனிச் செறிவினுடைய 10 அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மறை எண்ணாகும்.[negative logrithm to the base 10 of hydrogen ion concentration]
இப்படி பத்தின் ம்டங்காக இருப்பதால் ஒரு அலகு [unit]pH மாற்றம் என்பது முன்னயதைவிட பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.
இனி சில பொருட்களில் உள்ள அமிலத்தன்மையைப் பார்ப்போம்.
[படத்தின் மீதுகிளிக்கிப் பார்க்கவும்[
pH மதிப்பு
7 என்பது நடுநிலைக் கரைசலையும்
<7 என்பது அமிலக் கரைசலையும்
>7 என்பது காரத்தன்மையையும் குறிக்கும் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.
சாதாரண மழை நீரின் pH மதிப்பு 5.6. ஆனால் சுற்றுச் சூழல் மாசு படுதலால் வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு [C02] மழை நீருடன் சேர்ந்து கார்பானிக் அமிலமாக மாறும்போது மழை நீரில் pH குறைந்து அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இதைத்தான் அமில மழை என்கிறோம்.
இது மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் சேரும் நைடஜன் -டை-ஆக்ஸைடு ,கந்தக -டை-ஆக்ஸைடும் மழை நீருடன் அமிலமாக மாறுவதால் அமிலமழை பெய்கிறது.இது பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு பளிங்கினால் கட்டப் பட்ட பெரிய கட்டிடங்கள்,நினைவுச் சின்னங்களையும் சிதிலமடையச் செய்கிறது.
நல்ல செய்தி.இன்னும் விளக்கமாக சொல்லியிருக்கலாம்.
பதிலளிநீக்குwow super aunty
பதிலளிநீக்குuseful matter for kds
பதிலளிநீக்குநல்லது டீச்சர்! அவந்தி போல குழந்தைகளுக்கு இது புரியலாம், பாருங்க அபிஅப்பா 25+75 அல்லையடுல வாங்க கெமிஸ்ட்ரில என்ன பாடு பட்டிருப்பேன், போதும் டீச்சர் போதும்!!!!!!!!!!!!
பதிலளிநீக்குteacher :
பதிலளிநீக்குhttp://www.hummaa.com/justarrived.php?pg=ja&lg=14&lc=Children
You can take good songs from here for kids and publish or type them
you get good children songs
i will also try getting more songs if you are really interested in posting kids songs here
i have few kannada songs too..
Thanku 4 posting this Kanmani!!!!!!!!
பதிலளிநீக்குamila mazai erpaduvatharku vaahangalaili irunthu velyagum bugayum, air pollution miha mukyamana kaaranagalhalum.
பதிலளிநீக்கு