Thursday, November 20, 2008

ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்

கீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.
ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானே
இப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.

ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாக பயன்படுவது.உண்மையில் இவை அர்த்தமற்ற கிறுக்கல்கள்தான்.
உங்க வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது 'போர்' அடிச்சா என்ன செய்வீங்க?இல்லை வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்கும் போதோ அல்லது ஏதோ சிந்தித்தபடியே இருக்கும் போது உங்க கையில் ஒரு பேப்பரும் பேனாவும் அல்லது பென்சிலோ கிடைத்தால் எதையாச்சும் கிறுக்குவீங்கதானே. பிறகு அது என்னன்னு பார்த்தா ஆளுக்கொரு விதமா தோன்றும்.அதுக்குத்தான் 'டூடுல்ஸ்' [doodle]னு பேர்.

வீட்டில் போன் பேசும் போது சிலபேர் போன் புத்தகத்தில் எதையாவது வரைவாங்க.சில மாணவர்கள் வகுப்பில் எதையாவது கிறுக்கி ஒரு அவுட்லைன் போல கோடுகள் வரைந்து இது கணக்கு வாத்தியார் இது தமிழ் அய்யா னு குறும்பு செய்வாங்க.
இந்த மாதிரி அர்த்தமற்ற கிறுக்கல்களுக்கு கோட்டுச் சித்திரங்கள் [டூடுல்ஸ்]னு பேர்.
அதையே ஒரு 'புதிர்' [riddle] போல மாற்றி என்னன்னு கண்டு பிடிக்கச் சொன்னால் அதுக்குத்தான் ட்ரூடுல்ஸ் னு பேர்.

டூடுல்ஸ் [doodles] +ரிடில்ஸ் [riddles]=ட்ரூடுல்ஸ் [droodles] சரியா?

இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் ப்ரைஸ் என்னும் காமெடி எழுத்தாளர்.1950 களில் இது குறித்த புத்தகங்களை எழுதினார்.பின்னர் லியனார்ட் ஸ்டெர்ன் என்னும் தன் நண்பருடன் சேர்ந்து மேட் லிப்ஸ் [mad libs] என்னும் கதை சொல்லும் விளையாட்டை உருவாக்கினார்.
அந்தக் காலத்துல தமிழ்வாணன் என்ற தமிழ் நாவலாசிரியர் கூட தன் துப்பறியும் கதைகளில் இப்படி கோட்டுச் சித்திரங்களைப் பயன்படுத்தியிருக்கார்.
பின்னர் தொலைக்காட்சிகளில் 'கேம் ஷோ' எனப்படும் நிகழ்ச்சிகளில் இந்த ட்ரூடுல்ஸ் பிரதான இடம் பிடித்தது.நோட்டுப் புத்தகங்கள் சுவர் விளம்பரங்கள் ஷாப்பிங் பைகள் எல்லாவற்றிலும் இந்த கிறுக்கல் சித்திரங்கள் இடம் பிடித்தன.

முதலில் பார்க்கும் போது அர்த்தமற்ற கிறுக்கள்களாக தெரிந்தாலும் உற்று நோக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தெரியும் எனவே இந்த வகைப் புதிர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான 'பதில்கள்' இருக்கக் கூடும்.
இந்த வகை விளையாட்டுக்கள் ஞாபக சக்தி,கற்பனைத் திறன்,புதுப் புது சிந்தனைகளை வளர்க்க உதவும்.

உங்க பார்வைக்கு சில கீழே உள்ளன.


இது ஒரு பட்டர்ப்ளை கம்பியில் ஏறுகிறது [அ] ஒரு முக்கோணத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரிகிறது னும் சொல்லலாம்.


இது i என்ற எழுத்தின் நிழல் [அ] ஐ ஷேடோ [ஒரு முக அலங்காரம்]

இது நேரம் ஐந்து எனச் சொல்கிறது


இது தொப்பி அணிந்த உருவம் [அ] முறுக்கி விடப்பட்ட மீசை


இது கண் பரிசோதனை ஆஸ்பிட்டலில் உள்ள பலகை
[அ] இதில் L என்ற எழுத்து இல்லை.எனவே NO 'L' ஆகும். Noel என்றால் கிறிஸ்துமஸைக் குறிக்கும்.
இது ஒரு கண்ணாடி [அ] மழைத் துளிகள்
இது நீர் தேங்கிய குட்டை [அ] முட்டை தோசை
இது பாரா சூட் [பாதி விலையில் கிடைக்கிறதாம் ஹாஹா]
இது ஹீரோவும் வில்லனும் [அ]நன்மையும் தீமையும் [இடத்துக்குத் தக்கவாறு]
இது டூத் பிரஷ் [அ] ஷூ பாலிஷ் பிரஷ் [அ] தடுப்பு சுவர்[வேலி]
என்ன சுவாரஸ்யமா இருக்கா?சரி .
கீழே கட்டத்தில் உள்ள வரை படங்களைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து நிறைய புதுப் புது ட்ரூடுல்ஸ் உருவாக்கலாம்.உங்க நண்பர்களோடு விளையாடலாம்.[விடுமுறையில்]

Wednesday, November 12, 2008

காட்சிப்பிழை

குட்டீஸ்!
காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை என்றால் என்னெவென்று தெரியுமா உங்களுக்கு?அடைத்தான் ஆங்கிலத்தில் 'இல்யூஷன்' 'ஆப்டிகல் இல்யூஷன்' னு சொல்வாங்க.
இங்க கீழேயிருக்கும் படத்தைப் பாருங்க.ஆப்டிகல் இல்யூஷ்ன்னு எழுதியிருக்கா?அதையே இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்க. ஆப்டிகல் என்று தோன்றும்.



முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும்,கூர்ந்து நோக்கும் போது வேறு தோற்றமும் புலப்படும் நிலைதான் இல்யூஷன் எனப்படுவது.
நமது மூளையும் கண்களூம் சேர்ந்து நம்மை ஏமாற்றும் வேலைதான் அது.
பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து பிம்பத்தை புலப்படச் செய்கின்றன.
கீழே உள்ள படங்களில் முதல் படத்தில் TEACHஎன்றும் இரண்டாவது படத்தில் ME என்றும் இருப்பது கூர்ந்து பார்த்தால் LEARN என்றும் YOU என்றும் தெரியும்.




இப்படித்தான் இல்லாததை 'இருப்பதாக கற்பனை 'செய்வதில் மூளைக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றால் அதற்கு 'ஆமாம் சாமி' போடுவது நம் கண்கள்.
இரவு நேரத்திலும் இருட்டான வேளைகளிலும் 'பேய் பிசாசு இருப்பதாக கற்பனையான எதிர்பார்ப்புடன் நாம் பார்க்க,ஏதேனும் நிழல் தெரிந்தால் கூட கண்கள் அதை பேய்போல சந்தேகத்துடன் பார்க்க பயப்படுகிறோம்.
கீழே உள்ளப் படத்தைப் பாருங்க...
எந்தப் படமும் அசைவதில்லை.அனிமேஷனும் இல்லை.ஆனாலும் உற்று நோக்கினால் சுழல்வது போலத் தோன்றும்.


ஆனால் இந்த மூளையும்,கண்களும் இப்படியாக 'கூட்டு சதி'செய்வதால்தான் தொலைக்காட்சிகளிலும்,கணிணித் திரையிலும் நம்மால் பிம்பங்களையும்,அசையும் படங்களையும் பார்க்க முடிகிறது.
என்ன குட்டீஸ் இப்பவே கண்ணைக் கட்டுதா?
netoops blog