வெள்ளி, 2 ஏப்ரல், 2010

துன்பத்தை உதறித் தள்ளு...

ரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.



எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.
தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்

13 கருத்துகள்:

  1. ஆம், அனைத்திற்கும் ஆசைப்படு , திட்டமிட்டு ஆசைப் படு. நல்லப் பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்லாயிருக்கு. படிக்கும்போதெல்லாம் தன்னம்பிக்கை கொடுக்க கூடிய கதை.

    (ஆமா கழுதை படம் எப்படி?)

    பதிலளிநீக்கு
  3. நன்றி சரவணன்

    நன்றி பிரசன்னா

    நன்றி அக்பர் கூகுளாய வாழ்க

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்குங்க கத

    பதிலளிநீக்கு
  5. விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

    http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  6. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  7. அது கிடக்கு கழுதைன்னு இல்லாம அதுகிட்டேயும் பாடம் படிக்கலாம் என்பதை அழகாகக் கூறியிருக்கிறீர்கள் .அருமை

    பதிலளிநீக்கு
  8. நல்ல கதை.. கோமா கமெண்ட்டும் எனக்கு பிடிச்சிருக்கு..:)

    பதிலளிநீக்கு
  9. அருமை....எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... ஐந்தறிவுள்ள கழுதைக்கு வாழ்க்கையின் மேல் இவ்வளவு நம்பிக்கை இருக்குமெனில் அறறறிவு உள்ள நம்மில் சிலருக்கு அந்த நம்பிக்கை எங்கே போனது ????

    பதிலளிநீக்கு
  10. அருமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... ஐந்தறிவுள்ள கழுதைக்கு வாழ்க்கையின் மேல் இவ்வளவு நம்பிக்கை இருக்குமெனில் அறறறிவு உள்ள நம்மில் சிலருக்கு அந்த நம்பிக்கை எங்கே போனது ????

    பதிலளிநீக்கு
  11. ஐயா!
    வணக்கம். தாங்கள் வெப்சைட் தற்போது தான் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உள்ளீர்களா... Your Mail Please Sent.

    My Mail kumarm149@gmail.com

    பதிலளிநீக்கு

netoops blog