Thursday, December 20, 2007

எத்தனை பாலின்ட்ரோம்கள்?..குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு-3

குட்டீஸ்!!!!!!

பாலின்ட்ரோம் [palindrome] என்பது முன் பின்னாக படிக்கும் போது ஒரே மாதிரி இருக்கும் சொல்லோ ,சொற்றொடரோ,எண்களோ ஆகும்.
உதாரணமாக
தமிழில்: விகடகவி
ஆங்கிலத்தில்: Madam I'm Adam
A man,a plan,a canal,Panama
Was it a cat I saw?


சரி இப்ப என்னுடைய கேள்வி :

ஒரு டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 8:08 என்றால் அடுத்த 62 நிமிடத்திற்குள் அந்த கடிகாரம் எத்தனை பாலின்ட்ரோம் எண்களைக் காட்டும்?
ஆரம்பிக்கும் எண்ணையும் கணக்கில் கொள்ளவும்.

ஈ*ஈ*ஈ*....[குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு..2]

குட்டீஸ்!!!!!!!!!!!

கீழே உள்ள ஒன்பதுக்கு ஒன்பது கட்டத்தில் ஒன்பது ஈக்கள் உள்ளது.
அவை ஒவ்வொன்றும் நேராகவோ, பக்க வாட்டிலோ, மேல்,கீழாகவோ, குறுக்கு வாட்டிலோ இரட்டை ஆகாமல் [ஒரே நேர்க்கோட்டில் வராமல்] தனித்தனியாய் இருப்பதைப் பாருங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது இதில் மூன்று ஈக்களை மட்டும் இடம் மாற்றி வைக்கனும்.




அப்படிச் செய்த பிறகும் எந்த இரண்டு ஈக்களும் நேராகவோ இட வலமாகவோ மேல்கீழாகவோ குறுக்காகவோ ஒரே நேர்க் கோட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் விதி.





என்ன சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர்களா ? முடிந்தவரை பெரியவங்க ஆலோசனை இல்லாம நீங்களே முயற்சி செய்யுங்க.



விடை அடுத்த பதிவில் சரி பார்த்துக் கொள்ளுங்க.


கட்டம் எண்ணைக் குறிப்பிட்டும் எங்கிருந்து எங்கு நகர்த்தலாம் என பின்னூட்டம் தரலாம்.


குறிப்பு:குட்டீஸ்கார்னர் என்ற புதிய வலைப் பூ உருவாகி இருப்பதால் குழப்பம் தவிர்க்க வேண்டி இன்று முதல் இந்த வலைப் பூ 'குட்டீஸ்ஜங்ஷன்' என்பது 'அரும்புகள்'' என்ற பெயரில் வரும்.


*
*






விடை கீழேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*





Monday, December 17, 2007

குட்டீஸ் சாண்டா செய்வோமா.............

குட்டீஸ்

இந்த கிறுஸ்துமஸ்க்கு நீங்களே அழகான அழகான சாண்டா
செய்து பார்க்கலாம் வாருங்கள்.

தேவைப் படும் பொருட்கள்:

முட்டை ஓடு
பவுண்டேஷன்[ஃபேஸ் கிரீம்]அல்லது ரோஸ் பவுடர்
பஞ்சு
சிவப்பு நிற வெல்வட் அல்லது வழவழப்பு பேப்பர்
கறுப்பு மற்றும் சிகப்பு ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கள்
சலோபன் நாடா
கம் அல்லது க்ளூ



முதலில் முட்டை ஓட்டில் மிகச் சிறிய துளையிட்டு அதில் உள்ள மஞ்சள்,,வெள்ளைக் கருவை வெளியில் கொட்டி விட்டு கழுவி காயவைக்கவும்.அதன் மீது பவுண்டேஷன் அல்லதுரோஸ் பவுடர் கொண்டு தேய்த்து பிங்க் நிறம் கொண்டடு வரவும்.


பிற்கு பஞ்சை நீளவாக்கில் கட் செய்து முட்டை ஓட்டின் கீழ்ப் பகுதியில் பசை தடவி மீசை போல் ஒட்டவும்.இரு சிறிய துண்டுகளை வெட்டி புருவம் போல் ஒட்டவும்.இரு பக்க வாட்டிலும் பஞ்சை ஒட்டவும்.

கறுப்பு பொட்டை இரு கண்களுக்குவ்வைத்து ஒட்டவும்.சிகப்பு நாடா அல்லது பேப்பரை கூம்பு வடிவில் செய்து தலையில் தொப்பி போல் வைத்து பசை அல்லது செல்லோ நாடா கொண்டு ஒட்டவும்.

அதில் ஒருதுண்டை மூக்காகவும் உதடாகவும் ஓட்டவும்.

மேலும் சிறிது பஞ்சை தாடி போல் ஒட்டித் தொங்க விடவும்.


தொப்பியில் இரு துளையிட்டு பக்கவாட்டிலிருந்து ஒரூகம்பியை பஞ்சு சுற்றி தொங்க விடவும்.


இதோ சாண்டா கிளாஸ் ரெடி

இனி என்ன கிறுஸ்துமஸ் மரத்தில் கட்ட வேண்டியதுதானே.

Sunday, December 16, 2007

கை நாட்டு இல்லை கலை வண்ணம் [குட்டீஸ்:விடுமுறை குறிப்புகள்]

குட்டீஸ்!

கை விரலில் மை தடவி காகிதத்தில் வைப்பவர்களை
'கை நாட்டு'ன்னு தானே சொல்வாங்க.
ஆனா அக்கா சொல்ற மாதிரி செய்தால் 'கலை வண்ணமாக' மாறுவதோடு வரப் போகும்'கிறுஸ்துமஸ்''புத்தாண்டுக்கு' நீங்களே அழகான வாழ்த்து அட்டை தயாரித்து உங்க நண்பர்களுக்கு கொடுக்கலாம்.அத்துடன் விடுமுறையும் பயனுள்ளதாக இருக்கும்.சரியா?



படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.

தேவையான பொருட்கள்:

பேப்பர் அல்லது சார்ட் அட்டை [வேண்டிய வண்ணத்தில்]
மை அட்டை[ink pad]
மார்க்கர் பேனா அல்லது கலர் ஸ்கெட்ச் பேனா[maker pen or color sketch pens]
பசை:[glue or gum]
ஜிகினாப் பொடி[glitter powder]
ஆர்வமும்,கற்பனா சக்தியும்

செய்முறை:
1.கை விரல்களை மை அட்டையில் வைத்து தேய்த்துப் பின் பேப்பரில் வைத்து கை நாட்டு போல் வைக்கவும்.

2.எது மாதிரி வரையப் போகிறோமோ அதற்குத் தகுந்தபடி நேராகவோ,வலது,இடது புறமாகவவோ விரல் அடையாளத்தைப் பதிய வேண்டும்.

இது ஓவியத்தின் தலைப் பகுதியாகவும் அல்லது உடலாகவும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

3.மை அடையாளம் [print] அளவுக்கு ஏற்ப எந்த விரலிலும் மை தடவிப் பயன் படுத்தலாம்.
4.சிறிது நேரம் மை அடையாளம் காய வேண்டும்.[குட்டீஸ் அதற்குள் கையை சோப் போட்டு கழுவிக் கொள்ளலாம்]

5.பின் கலர் அல்லது மார்க்கர் பேனாவால் படத்தின் கண்,காது ,வால் என தேவைப் படும் பகுதிகளை வரைய வேண்டும்.

6.விருப்பமானால் பசை தடவி படத்தைச் சுற்றி அழகிய ஜமிக்கி,மணிகள் ,செயற்கைக் கற்கள் ஒட்டலாம்.ஜிகீனாத் தூளும் [glitter powder] தூவலாம்.

7.இப்போது நீங்களே வரைந்த அழகான புதுமையான விரல் ரேகைப் படம் [finger print drawing]தயார்.

வழி எங்கே?... போகனும் அங்கே..விடுமுறை விளையாட்டு..1

வணக்கம் குட்டீஸ்!

இன்னும் கொஞ்ச நாள்ல கிறுஸ்துமஸ் விடுமுறை வருதில்லையா?

அப்ப பொழுது போகாம போரடிச்சி இருப்பீங்க.ஒரே விளையாட்டை எத்தனை முறைதான் விளையாடுவது.
அதனால அக்கா இங்கே ஒரு படம் போட்டிருக்கேன்.அது மேலே எலிக் குட்டிய [மவுஸ்]வைத்து சொடுக்கினா பெரிதாகும்.

அங்கே 'ஸ்டார்ட்' னு ஆரம்பிச்ச இடத்திலிருந்து 'ஃபினிஷ்' வரை உங்க எலிக்குட்டியை [மவுஸை ] நகர்த்திக் கிட்டு வாங்க.

ஒரே ஒரு சரியான பாதைதான் இருக்கு.தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தா நீங்க ஏப்ரல் முட்டாளாக மாறவும் வாய்ப்பிருக்கு.நிறைய தடைகளும் இருக்கு.

ஆனால் நீங்கதான் புத்திசாலிகளாச்சே நிச்சயம் வெற்றி பெறுவீங்க.

இந்த படத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் பென்சிலின் உதவியோடு வழி கண்டு பிடிக்கலாம்.

முயலுங்கள் !வாழ்த்துக்கள்!!.


Friday, December 14, 2007

உலகின் மிகப் பெரிய ராட்சத உயிரினம்

அன்பு குழந்தைகளுக்கு அக்காவின் வணக்கம்
அக்காவுக்கு கொஞ்சம் வேலை அதிகம்.நீங்களும் பரீட்சை அது இதுன்னு பிஸியா இருப்பீங்கதானே.

உலகின் மிகப் பெரிய ராட்சத உயிரினம்[living organism] எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.

என்ன நீலத் திமிங்கலமா..[bluewhale].இல்லையே..அது விலங்கினத்தில் மிகப் பெரியதுதான்னாலும்,
நான் சொல்லப் போகும் உயிரினம் தாவரவகையைச் சேர்ந்தது.

அதன் பேர் ஹனி மஷ்ரூம்[honey mashroom]..


நேத்து பெய்த மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளான் னு சொல்லுவாங்கல்லே..அந்த வகையைச் சேர்ந்ததுதான் ஹனி மஷ்ரூம்.

நிலப் பரப்பில் இர்ருந்து மூன்று அடி ஆழத்தில் காணப்படும் இது சுமார் 3.5 மைல் நீளத்திற்கு [கிட்டத்தட்ட 2200 ஏக்கர் பரப்பளவிற்கு] பரந்து காணப்படும்.
இது 1000 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை உள்ளடக்கியதாம்.
அமெரிக்காவில் கிழக்கு ஓரிகன் மாநிலத்தில் காணப்படும் இந்த ராட்சத காளான் ஆர்மில்லாரியா ஆஸ்டோயா எனப்படும் பூஞ்சை வகையைச் சார்ந்தது.இதுவே உலகின் மிகப் பெரிய உயிரினம்.


இது மரங்களின் வேர்களில் உள்ள நீரையும் சத்துக்களையும் உறிஞ்சி உயிர் வாழக்கூடிய ஒரு ஒட்டுண்ணி வகை உயிரினம்.

ஓரிகன் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காடுகளில் மரங்கள் அழிந்ததைக் கண்டு ஆராய்ந்த பிறகே இந்த ஹனி காளான் இருப்பது கண்டறியப்பட்டது.சுமார் 2400 வருடங்களுக்கு முந்தைய இது 7200 ஆண்டுகள் வரையிலும் இருக்கக்கூடியதாம்.
எடையளவில் 650 டன் இருக்கும் இது ஒரே ஒற்றை உயிரினமாகக் கருதாப்பட்டால் உலகின் மிகப் பெரிய உயிரினம் இதுதான்.
வாஷிங்டன் [1500 ஏக்கர்],மிச்சிகன்[37 ஏக்கர்] பகுதியிலும் இதே வகை ராட்சத காளான் கண்டு பிடிக்கப் பட்டாலும் ஓரிகன் மாநிலத்தில் இருப்பதே பரப்பளவில் பெரியது.
netoops blog