ஒரு வசதியான பெரிய மனிதருக்கு தன்னை ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை.அவருக்கு இரண்டு கண்களில் ஒன்றில் பார்வை கிடையாது.பார்ப்பதற்கும் விகாரமாக இருக்கும்.அதனால் தன்னை யார் அழகாக வரைகிறார்களோ அவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக் கூறினார்.ஆனால் அதே சமயம் ஓவியம் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் தண்டனையும் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பக்கத்து ஊரிலிருந்து மூன்று ஓவியர்கள் அவரின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரின் ஓவியத்தை வரையத் தொடங்கினர்.
முதலாமவனின் ஓவியத்தில் பெரிய மனிதரின் உருவத்தை அச்சு அசலாக வரைந்திருந்தான்.அந்த ஓவியத்தில் தன்னுடைய குருட்டு விழியைப் பார்த்ததும் தன்னைக் கேலி செய்வதாகக் கோபப்பட்ட பெரிய மனிதர் அவருக்கு 50 கசையடிகள் கொடுக்க உத்தரவிட்டார்.
இரண்டாவது ஓவியனும் அவரை அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான்.ஆனால் அவரின் இரு விழிகளையும் சீர்படுத்தி குருட்டுவிழி தெரியாதபடிஅழகாக வரைந்திருந்தான்.அதைப்பார்த்த பெரிய மனிதர் உண்மையை மறைத்து பொய்யாக தன்னைச் சித்தரித்திருப்பதைக் கண்டு கோபப்பட்டு அவனுக்கு 100 கசையடிகள் கொடுக்கச் சொன்னார்.
மூன்றாவது ஓவியன் அவரின் நேரான உருவத்தை வரையாமல் பக்கவாட்டுத் தோற்றத்தை[புரோஃபைல்] வரைந்திருந்தான்.அவரின் ஓவியம் அழகாக இருந்ததோடு குருட்டு விழியும் பக்கவாட்டில் மறைத்து வரையப்பட்டதால் மனம் மகிழ்ந்த அவர் அவனுக்கு நிறைய சன்மானங்களை வழங்கினார்.
பெரிய மனிதரிடம் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டாமலும்,பொய்யாக அதை மறைக்காமலும் ,அவரின் நிறையை மட்டுமே கண்டு கொண்டதால் மூன்றாமவனுக்கு பரிசு கிடைத்தது.
நல்ல கதை. நல்ல கருத்து.
பதிலளிநீக்குகரெக்ட்டான கருத்து..
பதிலளிநீக்குமிக்க நன்றி சித்ரா
பதிலளிநீக்குஅண்ணாமலையான்
நம்ம ப்ளாக் பக்கம் வாங்க
பதிலளிநீக்கு