சனி, 12 டிசம்பர், 2009

பெட்டி நிறைய முத்தங்கள்

 கிறுஸ்துமஸ்  நெருங்கிக்கொண்டிருந்தது.
பண்டிகைக்குசெலவு செய்யப் பணம்இல்லையென்று அப்பா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
அம்மா வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு கிறுஸ்துமஸ் மரம் அலங்கரித்தாள்.
வீட்டிலிருந்த சின்னப் பெண் தங்க நிற சரிகைத் தாளைக் கொண்டு ஒரு அட்டைப் பெட்டியை அலங்கரித்து கிறுஸ்துமஸ் மரத்தின் அடியில் வைத்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு கோபம் வந்தது "கையில் சிறிதும் பணமில்லாத இந்த நேரத்தில் ஏன் இப்படி வெட்டிச் செலவு செய்கிறாய்" என மகளைக் கடிந்தார்.

மறுநாள் கிறுஸ்துமஸ்.
குட்டிப் பெண் அந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டியைத் தந்தையிடம் கொடுத்தாள்.

"அப்பா என்னுடைய சிறிய பரிசு உங்களுக்காக"

நெகிழ்ந்து போன தந்தை முந்தைய நாள் மகளைக் கடிந்து கொண்டதற்காக வருந்தினார்.
ஆவலுடன் தங்கச் சரிகை சுற்றிய பெட்டியைத் திறந்து பார்த்தார்.உள்ளே ஏதும் இல்லை.தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"முட்டாள் பெண்ணே யாருக்கேனும் பரிசளித்தால் ஏதேனும் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாதா உனக்கு?"

அழுது கொண்டே மகள் சொன்னாள்"அப்பா இதில் என்னுடைய அன்பான முத்தங்களை நிரப்பி வைத்திருந்தேன்.என்னால் அதை மட்டுமே உங்களுக்குத் தர முடிந்தது"

மனம் நொறுங்கிப் போன தந்தை மகளைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

"என் செல்வமே இதை விடச் சிறந்த பரிசை யாராலும் தர முடியாது.உன்னைக் கோபப்பட்டு பேசியதற்கு என்னை மன்னித்து விடம்மா"என்றார்.

அதன் பிறகு அந்தப் பெட்டியை எப்போதும் தன்னோடே வைத்துக் கொண்டார்.
மகள் பெரியவளாகி மணம் முடித்துச் சென்று விட்ட பிறகும் தனக்கு மனக்கவலையோ பிரச்சனைகளோ வரும்போதெல்லாம் அவர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்து தன் மகளின் அன்பையும் அன்பு முத்தங்களையும் உணர்வதாக நினைத்துக் கொள்வார்.அவர் வேதனைகளும் தீர்ந்து விடும்.

10 கருத்துகள்:

  1. அன்பின் வெளிப்பாட்டை இதைவிட அழகாக சொல்லமுடியாது. கீப் இட் அப் அரும்புகள்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வெளிப்பாட்டை இதைவிட அழகாக சொல்லமுடியாது. அழகு.கீப் இட் அப். அரும்புகள்.

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவை 22 அல்லது 23 டிசம்பர் வெளியிட்டிருக்கலாம். பொருத்தமாக இருக்கும்.(ஏனெனில் மனிதர்கள் மறந்து விடுவார்கள்)நெஞ்சை தொட்ட விஷயம் அப்பாவுக்கு மகளின் பரிசு. தொடர்ந்து கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  4. அழகான கதைங்க கண்மணி

    பதிலளிநீக்கு
  5. மின் அஞ்சலில் ஆங்கிலத்தில் இந்த கதையை படித்து இருக்கிறேன். ஆனால், உங்கள் தமிழாக்கத்தில் படிக்கும் போது இன்னும் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. நன்றிங்க
    வாத்து கோழி
    அம்மிணி
    அண்ணாமலையான்
    சித்ரா

    பதிலளிநீக்கு

netoops blog