பங்க்சுவேஷன் எனப்படும் நிறுத்தல் குறிடுயீகள் எப்படி வந்ததுன்னு தெரியுமா?அதுல # $ & ! = ? போன்றவை எப்படி உருவாகின என்பது பற்றித் தெரிஞ்சுக்குவோம்.
இந்தக் குறியீட்டைப் பண்டைக்காலத்தில் பிரிட்டனில் thorpe எனப்படும் வயல்களால் சூழப்பட்ட பண்ணைகள் கிராமங்களைக் குறிக்கப் பயன் படுத்தினாங்களாம். இது எண்முக அமைப்பில் இருப்பதால் 'ஆக்டோதார்ப்' னும் சொல்வாங்க. நாம் இப்போ 'ஹாஷ்' னு சொல்லுவோம்.தொலை பேசிகளிலும் ,செல் பேசிகளிலும், கண்ணி விசை பலகையிலும் இதைப் பார்த்திருப்போம்.இதைpound sign எனவும் சொல்வாங்க.
இது அமெரிக்கப் பணமதிப்பைக் குறிக்கும் டாலர் குறியீடு என்பது தெரியும்.1700 களில் பணத்தைக் குறிப்பிட பெசோ [peso] எனப்படும் ஸ்பானிஷ் வார்த்தையே புழக்கத்தில் இருந்ததாம்.பின்னாளில் வந்த அமெரிக்க வெள்ளி டாலர்கள் அளவிலும் மதிப்பிலும் பெசோ வை ஒத்திருந்ததால் பழைய குறியீடான Ps ஐப் பயன்படுத்தி P யின் மீது S எழுதப்பட்டுப் பின் P யின் வளைவிப் பகுதி மறைந்து Sமீது ஒரு நேர்க்கோடு போல உருவானதுதான் இப்போதுள்ள இந்த டாலர் $ குறியீடு.
மேலும்[மற்றும்] என்பதை ஆங்கிலத்தில் குறிக்கும்[ ampersand.] என்பது லத்தீன் மொழியில் et எனப்படும்.இதுவே பின்னர் உரு மாற்றம் பெற்று . and என அழைக்கப்படுகிறது.
et எப்படி உருமாறி & amp; ஆகுது பாருங்க.1557ல் ராபர்ட் ரெக்கார்டே என்கிற ஆங்கில கணிதவியலார் ஒருவர்தான் இந்த சமம் எனப்படும் 'ஈக்குவல்' குறியீட்டைக் கண்டு பிடிச்சார்.அப்போதைய அதன் அளவு இப்போது இருப்பதை விட = ஐந்து மடங்கு நீளமாக இருக்குமாம்.இப்படி {=====} :))
ஆனால் இதை அங்கீகரிக்கப் பல நூற்றாண்டுகள் ஆனதாம்.
இவ்வளவு நேரம் இந்தப் பதிவைப் படிக்கும் வரை உங்க மனதிலும் இந்தக் குறிதானே இருந்தது.:)) மற்ற பல குறியீடுகளைப் போல இதுவும் லத்தின் மொழியிலிருந்து வந்ததுதான்.'question' எனப்படும் 'questio' என்ற வார்த்தை ஒரு வாக்கியத்தின் முடிவில் வரும் போது கேள்வி கேட்பதாக பதில் வேண்டி நிற்கும்.இதைச் சுருக்கி qo என எழுத அது வாக்கியத்தின் முற்றுப் புள்ளி போலவும் தவறுதலாக பொருள் கொள்ளப்பட்டதால்.q மேலேயும் o கீழேயுமாக எழுதப்பட்டு உருமாறி இப்போதுள்ள கேள்விக்குறி? போல ஆகி விட்டது.
exclamation point எனப்படும் இந்த ஆச்சர்யக்குறி io எனப்படும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது..io என்றால் ஆச்சர்யம் சந்தோஷம் என்று பொருள். இங்கும் எழுத்துக்களைச் சுருக்கி எழுத வேண்டி i ஐ மேலேயும் o வைக் கீழேயும் நீள் வாக்கில் எழுத அதுவே ! குறியாகிப் போனது.
அட இந்தப் பதிவைப் படித்த பின்னர் உங்க மனசுல !!!தானே???
நல்ல பதிவு டீச்சர்..
பதிலளிநீக்குபதிவைப்படிச்சதும் !!!!தான் ??? இல்லை :)
பதிலளிநீக்கு”அமெரிக்கப் பணமதிப்பைக் குறிக்கும் டாலர் குறியீடு” எல்லாம் சரிதான்.. இந்த டாலர் கொட்டோ கொட்டோன்னு கொட்டற மாதிரி ஏதாவது ஐடியா இருந்தா ஒரு பதிவு போடுங்களேன்.
பதிலளிநீக்குநன்றி சென்ஷி,அனானி,அம்மினி,அண்ணாமலையான்
பதிலளிநீக்கு! io நிஜமாகவே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஇதெல்லாம் எங்கிருந்து பிடிச்சீங்க......ஆச்சரியமான விசயங்கள்.....
பதிலளிநீக்குநன்றி அமித்து அம்மா ,kasbaby.இப்படி ஏதாச்சும் பார்த்தால் கேட்டால் பகிர்ந்துக்கத்தான் வலைப்பக்கம் இருக்கே.
பதிலளிநீக்குசூப்பர் பதிவு. மேலும் இந்த பதிவிலிருந்து பிசொ (piso) என்பதிலிருந்துதான் ’பைசா’ வந்தது என்றும் io என்பதிலிருந்துதான் ஆச்சர்யத்திற்கு ’ஐயோ’ என்ற சொல் வந்தது என்றும் கருதலாம்...
பதிலளிநீக்கு