சனி, 26 டிசம்பர், 2009

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

னைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நம் வாழ்க்கையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பது நாம் எப்படியிருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
ஒரு ஊர்ல ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.மாளிகையின் உள்ளே எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணாடிகளே பொருத்தப் பட்டிருந்தன.
ஒரு நாள் நாய்க் குட்டி ஒன்று உள்ளே சென்று பார்த்தது.மாளிகை முழுதும் கண்ணாடி என்பதால் பார்க்கும் இடமெல்லாம் நாய்க் குட்டிகளாகத் தெரியவும் இந்த குட்டி நாய்க்கு சந்தோஷம் வந்தது.தன் வாலை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தது.கண்ணாடியில் தெரிந்த நாய்க்குட்டியின் பிம்பங்களும் அதே போல வாலை ஆட்டுவதாகத் தெரிந்தது.அட்டா எத்தனை அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்னு நினைத்தபடியே சந்தோஷமாக வெளியே ஓடியது.



அதே ஊரில் இன்னொரு நாய்க் குட்டி இருந்தது.அது கொஞ்சம் முசுடு.யாரோடும் சேராமல் தனித்தே இருக்கும்.அந்த நாய்க்குட்டியும் கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்க்க விரும்பியது.கண்ணாடியில் தெரிந்த அதனுடை பிம்பங்களைப் பார்த்ததும் அதற்கு பயமும் வெறுப்பும் வந்ததால் தற்காப்புக்காக முறைத்தபடியே கோபமாகப் பார்த்தது.அதனுடைய பிம்பங்களும் அவ்வாறே திரும்ப முறைக்கவும் அடடா இத்தனை எதிரிகளா எனப் பயந்து வெளியே ஓடி விட்டது.

அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யலாம்.வெறுப்பு ,கோபம் இவற்றை விதைத்தால் திரும்பக் கிடைப்பதும் அதுவே.நாம் என்ன செய்கிறோமே அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்.நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

குருட்டு விழியும் ஓவியமும்


ரு வசதியான பெரிய மனிதருக்கு தன்னை ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை.அவருக்கு இரண்டு கண்களில் ஒன்றில் பார்வை கிடையாது.பார்ப்பதற்கும் விகாரமாக இருக்கும்.அதனால் தன்னை யார் அழகாக வரைகிறார்களோ அவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக் கூறினார்.ஆனால் அதே சமயம் ஓவியம் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் தண்டனையும்  கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பக்கத்து ஊரிலிருந்து மூன்று ஓவியர்கள் அவரின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரின் ஓவியத்தை வரையத் தொடங்கினர்.

முதலாமவனின் ஓவியத்தில் பெரிய மனிதரின் உருவத்தை அச்சு அசலாக வரைந்திருந்தான்.அந்த ஓவியத்தில் தன்னுடைய குருட்டு விழியைப் பார்த்ததும் தன்னைக் கேலி செய்வதாகக் கோபப்பட்ட பெரிய மனிதர் அவருக்கு 50 கசையடிகள் கொடுக்க உத்தரவிட்டார்.

இரண்டாவது ஓவியனும் அவரை அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான்.ஆனால் அவரின் இரு விழிகளையும் சீர்படுத்தி குருட்டுவிழி தெரியாதபடிஅழகாக வரைந்திருந்தான்.அதைப்பார்த்த பெரிய மனிதர் உண்மையை மறைத்து பொய்யாக தன்னைச் சித்தரித்திருப்பதைக் கண்டு கோபப்பட்டு அவனுக்கு 100 கசையடிகள் கொடுக்கச் சொன்னார்.

மூன்றாவது ஓவியன் அவரின் நேரான உருவத்தை வரையாமல் பக்கவாட்டுத் தோற்றத்தை[புரோஃபைல்] வரைந்திருந்தான்.அவரின் ஓவியம் அழகாக இருந்ததோடு குருட்டு விழியும் பக்கவாட்டில் மறைத்து வரையப்பட்டதால் மனம் மகிழ்ந்த அவர் அவனுக்கு நிறைய சன்மானங்களை வழங்கினார்.

பெரிய மனிதரிடம் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டாமலும்,பொய்யாக அதை மறைக்காமலும் ,அவரின் நிறையை மட்டுமே கண்டு கொண்டதால் மூன்றாமவனுக்கு பரிசு கிடைத்தது.

சனி, 12 டிசம்பர், 2009

பெட்டி நிறைய முத்தங்கள்

 கிறுஸ்துமஸ்  நெருங்கிக்கொண்டிருந்தது.
பண்டிகைக்குசெலவு செய்யப் பணம்இல்லையென்று அப்பா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
அம்மா வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு கிறுஸ்துமஸ் மரம் அலங்கரித்தாள்.
வீட்டிலிருந்த சின்னப் பெண் தங்க நிற சரிகைத் தாளைக் கொண்டு ஒரு அட்டைப் பெட்டியை அலங்கரித்து கிறுஸ்துமஸ் மரத்தின் அடியில் வைத்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு கோபம் வந்தது "கையில் சிறிதும் பணமில்லாத இந்த நேரத்தில் ஏன் இப்படி வெட்டிச் செலவு செய்கிறாய்" என மகளைக் கடிந்தார்.

மறுநாள் கிறுஸ்துமஸ்.
குட்டிப் பெண் அந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டியைத் தந்தையிடம் கொடுத்தாள்.

"அப்பா என்னுடைய சிறிய பரிசு உங்களுக்காக"

நெகிழ்ந்து போன தந்தை முந்தைய நாள் மகளைக் கடிந்து கொண்டதற்காக வருந்தினார்.
ஆவலுடன் தங்கச் சரிகை சுற்றிய பெட்டியைத் திறந்து பார்த்தார்.உள்ளே ஏதும் இல்லை.தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"முட்டாள் பெண்ணே யாருக்கேனும் பரிசளித்தால் ஏதேனும் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாதா உனக்கு?"

அழுது கொண்டே மகள் சொன்னாள்"அப்பா இதில் என்னுடைய அன்பான முத்தங்களை நிரப்பி வைத்திருந்தேன்.என்னால் அதை மட்டுமே உங்களுக்குத் தர முடிந்தது"

மனம் நொறுங்கிப் போன தந்தை மகளைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

"என் செல்வமே இதை விடச் சிறந்த பரிசை யாராலும் தர முடியாது.உன்னைக் கோபப்பட்டு பேசியதற்கு என்னை மன்னித்து விடம்மா"என்றார்.

அதன் பிறகு அந்தப் பெட்டியை எப்போதும் தன்னோடே வைத்துக் கொண்டார்.
மகள் பெரியவளாகி மணம் முடித்துச் சென்று விட்ட பிறகும் தனக்கு மனக்கவலையோ பிரச்சனைகளோ வரும்போதெல்லாம் அவர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்து தன் மகளின் அன்பையும் அன்பு முத்தங்களையும் உணர்வதாக நினைத்துக் கொள்வார்.அவர் வேதனைகளும் தீர்ந்து விடும்.

வியாழன், 10 டிசம்பர், 2009

$ & # = ! ?

தென்ன தலைப்புல டாலர்,ஹேஷ் ,அம்பர்சண்ட் [அண்டு] குறிகள் இருக்கேவென ஆச்சரியமாகவும் கேள்வியாகவும் யோசிக்கிறீங்கதானே?
பங்க்சுவேஷன் எனப்படும் நிறுத்தல் குறிடுயீகள் எப்படி வந்ததுன்னு தெரியுமா?அதுல #   $  &   !? போன்றவை எப்படி உருவாகின என்பது பற்றித் தெரிஞ்சுக்குவோம்.


இந்தக் குறியீட்டைப் பண்டைக்காலத்தில் பிரிட்டனில் thorpe  எனப்படும் வயல்களால் சூழப்பட்ட பண்ணைகள்  கிராமங்களைக் குறிக்கப் பயன் படுத்தினாங்களாம்.  இது எண்முக அமைப்பில் இருப்பதால் 'ஆக்டோதார்ப்' னும் சொல்வாங்க. நாம் இப்போ 'ஹாஷ்' னு சொல்லுவோம்.தொலை பேசிகளிலும் ,செல் பேசிகளிலும், கண்ணி விசை பலகையிலும் இதைப் பார்த்திருப்போம்.இதைpound sign எனவும் சொல்வாங்க.





இது அமெரிக்கப் பணமதிப்பைக் குறிக்கும் டாலர் குறியீடு  என்பது தெரியும்.1700 களில் பணத்தைக் குறிப்பிட பெசோ [peso] எனப்படும் ஸ்பானிஷ் வார்த்தையே புழக்கத்தில் இருந்ததாம்.பின்னாளில் வந்த அமெரிக்க வெள்ளி டாலர்கள் அளவிலும் மதிப்பிலும் பெசோ வை ஒத்திருந்ததால் பழைய குறியீடான  Ps ஐப் பயன்படுத்தி P யின் மீது S எழுதப்பட்டுப் பின் P யின்  வளைவிப் பகுதி மறைந்து Sமீது ஒரு நேர்க்கோடு போல உருவானதுதான் இப்போதுள்ள இந்த டாலர்  $ குறியீடு.




மேலும்[மற்றும்] என்பதை ஆங்கிலத்தில் குறிக்கும்[ ampersand.] என்பது லத்தீன் மொழியில் et    எனப்படும்.இதுவே பின்னர்  உரு மாற்றம் பெற்று . and என அழைக்கப்படுகிறது.
et எப்படி உருமாறி &  amp;   ஆகுது பாருங்க.


1557ல் ராபர்ட் ரெக்கார்டே என்கிற ஆங்கில கணிதவியலார் ஒருவர்தான் இந்த சமம் எனப்படும் 'ஈக்குவல்' குறியீட்டைக் கண்டு பிடிச்சார்.அப்போதைய அதன் அளவு இப்போது இருப்பதை விட  = ஐந்து மடங்கு நீளமாக இருக்குமாம்.இப்படி {=====}  :))
ஆனால் இதை அங்கீகரிக்கப்  பல நூற்றாண்டுகள் ஆனதாம்.



இவ்வளவு நேரம் இந்தப் பதிவைப் படிக்கும் வரை உங்க மனதிலும் இந்தக் குறிதானே இருந்தது.:)) மற்ற பல குறியீடுகளைப் போல இதுவும் லத்தின் மொழியிலிருந்து வந்ததுதான்.'question' எனப்படும்  'questio' என்ற வார்த்தை ஒரு வாக்கியத்தின் முடிவில் வரும் போது கேள்வி கேட்பதாக பதில் வேண்டி நிற்கும்.இதைச் சுருக்கி qo என எழுத அது வாக்கியத்தின் முற்றுப் புள்ளி போலவும் தவறுதலாக பொருள் கொள்ளப்பட்டதால்.q மேலேயும்  o  கீழேயுமாக எழுதப்பட்டு  உருமாறி இப்போதுள்ள கேள்விக்குறி? போல ஆகி விட்டது.



                                                         
exclamation point எனப்படும் இந்த ஆச்சர்யக்குறி io எனப்படும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது..io  என்றால் ஆச்சர்யம் சந்தோஷம் என்று பொருள். இங்கும் எழுத்துக்களைச் சுருக்கி எழுத  வேண்டி i ஐ மேலேயும்  o வைக் கீழேயும் நீள் வாக்கில் எழுத அதுவே ! குறியாகிப் போனது.

அட இந்தப் பதிவைப் படித்த பின்னர் உங்க மனசுல !!!தானே???          

திங்கள், 7 டிசம்பர், 2009

பாக்லர்ஸ் [bogglers]

பாக்லர்ஸ்(bogglers) என்பது காட்சி சார்ந்த ஒருவகையானப் புதிர்ப் படங்கள்.நாம் சொல்ல விரும்பும் ஒரு ஆங்கில வார்த்தையையோ அல்லது சொற்றொடரையோ ஒரு படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளச் செய்யும்  மூளைக்கான  ஒரு விளையாட்டு.
முழுக்க முழுக்க வேடிக்கையான அதே நேரம் சிந்தனையைத் தூண்டி நம்மை மண்டையைக் குழப்பும்?:))  ஒரு வார்த்தை விளையாட்டு.
என்னுடைய இன்னொரு வலைப் பதிவில் இதுபோல ஒரு இடுகை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

கீழே உள்ள படங்களைப் பார்த்து அவை எந்த வார்த்தை அல்லது சொற்றொடரைக் குறிக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்க.
தெரியாதவற்றைக் கீழே உள்ள பதில் மூலம் தெரிஞ்சுக்கங்க.சரியா?
















 




 



 






 














answers:

working around the clock
Falling Asleep.
Fill in the Blanks.
Forward Thinking
See Eye to Eye
Sit down and Shut up
some where over the rainbow
Rising Tide
The Pen is mighter than the Sword
i forgot to call
First Lady
you 're under arrest
fo(u)rgive and forget
Just between You and Me
Multiplication Tables
you are on time
netoops blog