குட்டீஸ்!
கை விரலில் மை தடவி காகிதத்தில் வைப்பவர்களை
'கை நாட்டு'ன்னு தானே சொல்வாங்க.
ஆனா அக்கா சொல்ற மாதிரி செய்தால்
'கலை வண்ணமாக' மாறுவதோடு வரப் போகும்'கிறுஸ்துமஸ்''புத்தாண்டுக்கு' நீங்களே அழகான வாழ்த்து அட்டை தயாரித்து உங்க நண்பர்களுக்கு கொடுக்கலாம்.அத்துடன் விடுமுறையும் பயனுள்ளதாக இருக்கும்.சரியா?
படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.தேவையான பொருட்கள்:
பேப்பர் அல்லது சார்ட் அட்டை [வேண்டிய வண்ணத்தில்]
மை அட்டை[ink pad]
மார்க்கர் பேனா அல்லது கலர் ஸ்கெட்ச் பேனா[maker pen or color sketch pens]
பசை:[glue or gum]
ஜிகினாப் பொடி[glitter powder]
ஆர்வமும்,கற்பனா சக்தியும்
செய்முறை:
1.கை விரல்களை மை அட்டையில் வைத்து தேய்த்துப் பின் பேப்பரில் வைத்து கை நாட்டு போல் வைக்கவும்.
2.எது மாதிரி வரையப் போகிறோமோ அதற்குத் தகுந்தபடி நேராகவோ,வலது,இடது புறமாகவவோ விரல் அடையாளத்தைப் பதிய வேண்டும்.
இது ஓவியத்தின் தலைப் பகுதியாகவும் அல்லது உடலாகவும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
3.மை அடையாளம் [print] அளவுக்கு ஏற்ப எந்த விரலிலும் மை தடவிப் பயன் படுத்தலாம்.
4.சிறிது நேரம் மை அடையாளம் காய வேண்டும்.[குட்டீஸ் அதற்குள் கையை சோப் போட்டு கழுவிக் கொள்ளலாம்]
5.பின் கலர் அல்லது மார்க்கர் பேனாவால் படத்தின் கண்,காது ,வால் என தேவைப் படும் பகுதிகளை வரைய வேண்டும்.
6.விருப்பமானால் பசை தடவி படத்தைச் சுற்றி அழகிய ஜமிக்கி,மணிகள் ,செயற்கைக் கற்கள் ஒட்டலாம்.ஜிகீனாத் தூளும் [glitter powder] தூவலாம்.
7.இப்போது நீங்களே வரைந்த அழகான புதுமையான விரல் ரேகைப் படம் [finger print drawing]தயார்.