Tuesday, September 18, 2007

உருண்டைப் பறவை- குட்டிஸ் கதை

ஒரு ஊர்ல ஒரு அதிசியமான உருண்டை பறவை இருந்துச்சு. பறவைன்னா பறக்கனும் இல்ல குட்டீஸ். ஆனா இந்த பறவையினால பறக்க முடியாது.
அதுக்கு ஒரே கவலை. ஏதுனாச்சும் பண்ணி பறந்தே ஆகனும்னு உருண்டை பறவைக்கு.

அதுக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுத்துச்சு.

மரத்து மேல கஷ்டப்பட்டு ஏறுச்சு. பறந்து போய் உக்கார முடியாது இல்ல.

மரத்துமேல உக்கார்ந்து அதோட ரெக்கையை அடிச்சு பறக்க முயற்சி செய்துச்சு

ஆனா அதுனால பறக்க முடியலை. தொப்புன்னு கூழ விழுந்துறுச்சு

ஆனா பாருங்க குட்டீஸ் கீழ விழுந்தாலும் அதுக்கு அடி படலை. மரத்து மேல ஏறதுக்கு முன்னாடியே கீழ இலை எல்லாம் பரப்பி வச்சுறுச்சு. அதனால கீழ விழுந்தாலும் அடி படலை.

அப்புறம் தான் அதுக்கு புரிஞ்சது. எல்லாப் பறவைகளும் உருண்டையா இருக்காது. உருண்டையா இருக்குறது தான் இந்தப் பறவையோட சிறப்பு.

அது மாதிரி பறக்குறதும் சில பறவைகளின் சிறப்பு. அது புரிஞ்ச பின்னாடி தேவையில்லாம அந்த முயற்சி செய்யறதை நிறுத்திருச்சு.

குட்டீஸ் அதனால ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும் திறமையை தெரிந்து அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

7 comments:

  1. விரலுக்கேத்த வீக்கம்!

    நல்ல கதை, வழக்கம் போலவே!

    ReplyDelete
  2. நல்ல கதை அவந்தி! அப்படியே ஒரு போன் போட்டு நான் சொல்லும் நம்பருக்கும் சொல்லிடுப்பா!

    ReplyDelete
  3. அவந்தி, நல்ல கதை.. :)

    ReplyDelete
  4. இளா அண்ணா, அபி அப்பா, கோபி அண்ணா, ஜெகதீசன் அண்ணா

    எல்லார்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. நல்லா புடிக்கற அறிவுரை சொல்ற கதையா... ம்.. கீப் இட் அப்.

    ReplyDelete
  6. அவந்தி ரொம்ப அழகான கதை.

    ReplyDelete

netoops blog