Wednesday, September 12, 2007

எந்த எண்ணையும் சுலபமாய் ஒன்பதால் பெருக்கலாம்

அன்புக் குழந்தைகளே

பெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.
சின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!

செய்ய வேண்டியது:

1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.

2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.

3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.

4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.

என்ன குழம்புகிறதா?

உதாரணமாக 9x4=36

படத்தில் உள்ளது போல




உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]

3...6..=36 தான் விடை

இன்னொரு கணக்கு 9x7=63 இந்த விடை எப்படி வந்தது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?

22 comments:

  1. nice aunty it is easy to multiply with nine

    ReplyDelete
  2. வாவ்...

    டீச்சர். அசத்தலான ஐடியா... இந்த மாதிரி நிறைய டிப்ஸ் கொடுங்க.

    சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  3. ஹை...இது என்ன புதுக் க(தை)ணக்கு....

    நாளைக்கு நாங்களும் நியுமராலஜி பத்தி ஒரு பதிவு போடப் போறோம்ல..
    (சைக்கிள் கேப்ல நமக்கு ஒரு வெளம்பரம்...ஹி...ஹி..)

    ReplyDelete
  4. சூப்பர் டீச்சர், இது முதல்லயே தெரியாம போச்சே!

    ReplyDelete
  5. வெட்டி குட்டி[ஸ்]ங்க இடத்துல என்ன வெட்டியா......

    பங்காளி போடுங்க போடுங்க

    அபி அப்பா நீங்க கண்க்குல ஃபெயில் ஆன கதையிதானா?;)

    ReplyDelete
  6. //கண்மணி said...

    வெட்டி குட்டி[ஸ்]ங்க இடத்துல என்ன வெட்டியா......//

    டீச்சர் நாங்க எல்லாம் படிச்சி மத்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க கூடாதா?

    ReplyDelete
  7. டீச்சர்,
    Vedic Mathematicsனு ஒரு புத்தகம் இருக்கு. அதுல இந்த மாதிரி நிறைய டிப்ஸ் இருக்கும்.

    ReplyDelete
  8. இங்கே 9 வயதுப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்ததாக கூறிச் செய்தும் காட்டினார்கள்.

    ReplyDelete
  9. நல்லா இருக்கே....இரண்டுமே... :)))))))))

    ReplyDelete
  10. அட.. சூப்பரா இருக்குதே. இதை தான் விரல் விட்டு எண்ணுறதுன்னு சொல்லுவாங்களா டீச்சர்?

    ReplyDelete
  11. கணக்கு வாத்தியாரை ஏமாற்றலாமே...
    இன்னும் ஒருமுறை பள்ளியில் சென்று படிக்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
  12. Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o CresceNet(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. (If he will be possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll I thankful, bye friend).

    ReplyDelete
  13. double digit eppadi ?

    ReplyDelete
  14. டீச்சர் இதையெல்லாம் முன்னாடியே சொல்லிக் கொடுத்திருக்கக்கூடாதா?

    4 மார்க்ல எனக்கு ப்ளஸ்ஒன்ல சீட்டு கிடைக்காம என் வாழ்க்கையே இப்படி கமெண்ட்ஸ் போடுற அளவுக்கு வந்திருக்கு.. இதெல்லாம் நியாயமா?

    ReplyDelete
  15. இது எனக்கு முதலே தெரியும். அப்பா சொல்லித் தந்தார். :)

    ReplyDelete
  16. ஆஹா அப்ப அஞ்சலி குட்டிக்கு முன்ன நான் பதிவிட்டுட்டேனா

    ReplyDelete
  17. did u get this from a Malayalam film?????

    ReplyDelete
  18. its really good.. thanks..

    if we do slight alteration it holds for 2 digit aswell..

    1 digit.

    for eg: 05 * 9 , same as u said
    since the first digit is 0, u take the finger just before the folded one (4).. and how many after the folded one (5) and add 0 before the result.. so result is 045.

    2 digits

    for eg: 27 * 9 , same as u said
    since the first digit is 2, u take the finger 2nd before the folded one (4).. and how many after the folded one (3)add 2 before the result since u didnt go back beyond 0.. so result is 243.

    one more eg for 2 digit

    for eg: 72 * 9 , same as u said
    since the first digit is 7, u take the finger 7th before the folded one (4).. and how many after the folded one (8)add 6 (7-1 ie 6) before the result since we go back beyond 0 once(1).. so result is 648.

    have i confused u?? :) :)

    ReplyDelete
  19. புதிய எளிய முறை. குட்டீஸ்ஸூக்கு உதவும்

    ReplyDelete
  20. ஆஹா, சூப்பரான ஐடியா. தமதமான பின்னூட்டத்திற்கு மன்னிச்சுக்கோங்க டீச்சர்.

    ReplyDelete
  21. romba nalla irukkunga. very interesting

    ReplyDelete

netoops blog