Tuesday, September 4, 2007

ஆசிரியர் தினம் - குட்டீஸின் வணக்கங்கள்






நாம இப்போ யாராயிருந்தாலும் அதுக்கு முக்கிய காரணாயிருக்கறவுங்க நம்ம ஆசிரியர்கள்.





மேல படத்துல இருக்குறது யாருன்னு தெரியுதா குட்டீஸ். இவர் தான் ஓமர் முக்தர். The Lion of the Desert என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். எங்க மேக்ஸ் சார் எப்பவும் இவர பத்தி சொல்லுவார். லிபியா நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டவர். இத்தாலிக்கு எதிரா போரிட்டு அவர்களுக்கே ஒரு நடுக்கம் வர வைத்தவர். இவர் ஒரு ஸ்கூல் டீச்சர். அவரோட வழி நடத்தலும், நம்பிக்கையும் தான் அவரோட இருந்தவங்களுக்கு டானிக். அவரைப் பொருத்தவரைக்கும் முதலில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தப்டி நடக்க வேண்டும்.


எல்லா ஆசிரியர்களுக்கும் இன்னைக்கு என்னோட வணக்கத்தையும் நன்றியையும் உங்க எலலார் சார்புலேயும் சொல்லிக்குறேன்.


தருமி ஐயா, கண்மணி அக்கா, காயத்திரி அக்கா அவர்களுக்கு என் வணக்கங்கள். எல்லா குட்டீஸ்க்கு உங்கள் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் வேண்டி


அவந்திகா


13 comments:

  1. நானும் எல்லா வாத்தியாருங்களுக்கும்...டீச்சரம்மாக்களுக்கும் வணக்கத்த சொல்லிக்கிறேன்....

    -பங்காளி...

    ReplyDelete
  2. ஆஹா......... ஆசிரியர்கள் தின வாழ்த்து(க்)கள் அவந்தி.

    இங்கே நியூஸி பள்ளிக்கூடத்தில் ஒருமுறை ஆசிரியர்கள் தினம், குழந்தைகள் தினம்
    பற்றியெல்லாம் ஒருமுறை பேசுனப்ப, ஆசிரியர்கள் உள்பட எல்லாருக்கும் ஆச்சரியமாப் போச்சு.
    'இண்டியா இஸ் க்ரேட்'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

    ReplyDelete
  3. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்..வணக்கங்கள் :)

    ReplyDelete
  5. my hearty wishes to all the teachers and welldone avanthika....your message is great!!!....keep it up:}

    ReplyDelete
  6. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கங்கள் .
    அவந்திகா ரொம்ப அழகா ஓமர் முக்தர் பற்றிச் சொல்லிட்டீங்க.
    உண்மையான வார்த்தைகள்.
    நல்லா இருந்ததுப்பா.

    ReplyDelete
  8. அவந்திகா வாழ்த்துக்கும் குறுஞ்செய்திக்கும் நன்றி செல்லம்.
    அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எல்லார்த்துகும் நன்றி..

    தருமி ஐயா, கண்மணி அக்கா நன்றி
    :-)

    ReplyDelete
  10. ஆனந்த விகடனில் தங்கள் வலைப்பதிவு பற்றி தகவல் வந்திருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அவந்தி! நம்ம துளசி டீச்சர் சரியா பாடம் சொல்லி தராம இருந்திருக்கலாம் அதுக்காக அவங்களுக்கு வனக்கம் வைக்காம இருக்கலாமோ:-))

    துளசி டீச்சர் என் வணக்கம் புடிச்சுகோங்க!!

    ReplyDelete

netoops blog