ஹாய் குட்டீஸ்!
உங்களுக்கு புதிய முயல் ஆமை கதை தெரியுமா?
ஒரு காட்டுல இருந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வச்சாங்களாம்.
முயலோட போட்டி போட முடியாது. உன் தகுதிக்கு மீறி ஆசைப் படாதேன்னு ஆமையோட பிரண்ட்ஸ் சொன்னாங்களாம்.
அதுக்கு ஆமை சொல்லிச்சாம் 'போங்கடா பயந்தாங்கொல்லிகளா. இதுக்கு முன்னாலே எங்க தாத்தா இப்படித்தான் ஒரு முயலோட ஓட்டப் பந்தயத்துல கலந்துகிட்டாராம். தான் பலசாலி வேகமா ஓடுபவன் னு திமிரோட அந்த முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க எங்க தாத்தா ஆமை மெதுவா ஓடிப் போயி ஜெயிச்சிடுச்சாம்.
அப்போ அந்த ஜட்ஜ்'ஸ்லோ வின் த ரேஸ்னு'
தன்னைப் பத்தி கர்வமாயிருப்பவன் ஜெயிக்கிறதில்லை அப்படீன்னு சொன்னாராம்.
அதனால நானும் ஜெயிச்சுக் காட்டுவேன்னு' சொல்லியதாம்.
போட்டி நாள் அன்னைக்கு ரெண்டும் ஓடத் தொடங்கியதாம்.
வேகமா ஓடிய முயல் பின்னால ஆமை வராததால சரி கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுப்போமென்று ஒரு மரத்து நிழல்ல படுத்து விட்டதாம்.
மெதுவா ஓடி வந்துகிட்டிருந்த ஆமை வெகு நேரம் கழித்து முயல் தூங்கும் மரத்தருகே வந்ததாம். மரத்தடியில முயல் தூங்குவதைப் பார்த்ததாம்.
ஆஹா இந்த முயல்கள் என்னைக்குமே கர்வம் புடிச்சவர்கள்.
திருந்தவே மாட்டார்களோ என்று நினைத்தபடி ஓட்டத்தைத் தொடர்ந்ததாம்.
திரும்பித் திரும்பி பார்த்தபடி ஓட முயல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணலையென்றதும் தன் தாத்தாவைப் போலவே தான் தான் ஜெயிக்கப் போறோம்னு ஆமைக்கு சந்தோஷமாம்.
வின்னிங் பாயிண்ட்டை நெருங்கும் போது பின்னால் வேகமாக முயல் வருவது தெரிந்ததாம்.
ஓடி வந்த முயல் வின்னிங் பாயிண்ட்டை முதலில் தொட்டு ஜெயித்ததாம்.
ஆமைக்கு ஒரே ஆச்சரியம் .அதோடு சந்தேகமும்.
நல்லா தூங்கிக் கொண்டிருந்த முயல் எப்படி திடீரென்று ஓடி வந்து ஜெயிச்சிடுச்சு.ஒருவேளை பயத்துல நாமதான் கனவு காண்கிறோமா இல்லை பிரமையா ன்னு தன்னையே கிள்ளிப் பார்த்ததாம்.
முயல் சிரித்துக் கொண்டே சொல்லியதாம்,'நண்பா எல்லா நேரத்திலும் எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்க மாட்டாங்க.எங்க தாத்தா ஏதோ தப்புக் கணக்குப் போட்டு தூங்கியதால தோத்துப் போயிட்டார்.
ஆனா நான் இந்தக் காலத்துப் பிள்ளை.எப்படி டைம் மானேஜ் பண்ணுவதுன்னு தெரியும்.
உன் வேகத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணக்கு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ரெஸ்ட் எடுத்தேன்.
எப்படி கரெக்ட்டான நேரத்துல விழிச்சேன்னு பாக்கறியா?இதோ பாரு என் கைக்கடிகாரத்தில் டைம் செட் பண்ணி அலாரம் வத்திருந்தேன்.அலாரம் அடித்ததும் எழுந்து ஓடி வந்து உன்னை முந்திவிட்டேன்' என்று சிரித்ததாம்.
ஆமை உடனே,'சாரி நண்பா நான் உன்னைத் தவறாக எடை போட்டுவிட்டேன்.உன் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் 'என்று வாழ்த்தியதாம்.
என்ன குட்டீஸ் கதை பிடிச்சிருக்கா? நீதி என்னன்னு கேக்கறீங்களா?
நீதி: யாரையும் தப்புக் கணக்கு [under estimate]பண்ணக்கூடாது
சரியானபடி திட்டமிட்டு [planning]ஒரு வேலையைச் செய்தால் நிச்சயம் வெற்றிதான்.
ஓகே சீ யூ பை
கண்மணி ஆண்ட்டி
கத நல்லாருக்கு ஆந்த்தி
பதிலளிநீக்குஅக்கா
பதிலளிநீக்குநீங்க அழகா கீழ moral போட்டுட்டீங்க
நான் இது வரைக்கும் போடலை.. இனிமே போடனும்..
புயலுக்கு நடுவே ஒரு பூ பூத்திருக்கு...
பதிலளிநீக்குதொடரட்டும் சிறுவர்கள்..குழாம்..
வாழ்த்துக்கள்
இயன்ற வரை நல்ல தமிழில் கதை சொன்னால் பரவாயில்லை..வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு அரை குறை தமிழைக் கற்றுத் தர வேண்டுமா? ஆண்ட்டி என்பதை விட அத்தை என்று சொன்னால் இனிமையாக இருக்குமே? குட்டீஸ், சுட்டீஸ் என்ற சிறுவர் மலர், ஆனந்த விகடன் தமிழ்க் கொலையைத் தவிர்க்கலாம். இப்போது உள்ள பதிவின் நடையைக் கிராமத்துப் பிள்ளைகளால் பின்பற்றுவது சிரமம் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅனானி நண்பரே வாங்க
பதிலளிநீக்குஇது அரைகுறை தமிழ் இல்லை.பேச்சு வழக்கு நடை.எந்த கிராமத்து குழந்தைக்கு ஆண்ட்டி,மம்மி,டாடி என்றால் தெரியாது சொல்லுங்கள்?
குட்டீ,சுட்டீ என்பது ஆசையில் சொல்வதுதானே.சில நடைமுறை வார்த்தைகளின் பயன்பாடு தமிழை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை.சரியா?முடிந்தவரை கதையின் சாராம்சம் தமிழிலேதான் உள்ளது.
இந்த தளத்தில் ஆங்கில புதிர்களும் உண்டு நண்பரே.
தமிழ் என்று வந்த பிறகு கிராமம் நகரம்னு ஏன் பாகுபாடு?
மேலும் வலையில் இதைப் படிக்கும் வாய்ப்புள்ள கணிணி பற்றித் தெரிந்த எந்த குழந்தையும் ஓரளவு ஆங்கிலம் அறிந்திருக்கும்தானே.
குட்டிகள், சுட்டிகள், கண்ணுங்களான்னு சொன்னா அது தமிழ். குட்டீs சுட்டீs தமிங்கிலம்.
பதிலளிநீக்குகுட்டீஸ் junction என்ற தலைப்பே தமிங்கிலம் தான். அரும்புகள் என்பதையே பெயரா வைச்சிருக்கலாமே?winning point, rest, friends, slow and steady, time manage, correct, time set, alarm, sorry, ok c u bye, aunty என்று இத்துணூன்டு கதையில் எதற்கு இத்தனை ஆங்கிலச் சொற்கள்?
ஆண்ட்டி, அங்கிள்னாலே என்னன்னு தெரியாத குழந்தைகள் எங்கள் சிற்றூரில் உண்டு. winning point, slow and steady, manage எல்லாம் புரிய வாய்ப்பே இல்லை. ஐரோப்பாவில் ஆங்கிலம் பேசாத ஜெர்மனி, பிரான்சு போன்ற இடங்களில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு இதில் உள்ள friends போன்ற ஆங்கில வார்த்தையும் கூட சத்தியமாகப் புரியாது. எல்லா தமிழ்க் குழுந்தைகளுக்கும் ஆங்கிலம் தெரியும், புரியும் என்பது பிழையான எண்ணம். தமழ்நாட்டு நகரத் தமிழ்க்குழந்தைகளுக்கு மட்டும் தான் உங்கள் பதிவு என்றால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
நான் ஆங்கிலத்துக்கு எதிரி இல்லை. ஒன்னு முழுக்க ஆங்கிலத்தில் எழுதுங்கள். இல்லை, முழுக்க தமிழில் எழுதுங்கள். இரண்டையும் குழப்பி அடிக்க வேண்டாம். தமிழில் எழுதி விட்டு அதற்கு அடைப்புக்குறிக்குள் (under estimate) போன்று விளக்கம் தருவது கொடுமையின் உச்சம். நீங்கள் சொல்ல வரும் கருத்தைத் துல்லியமாகத் தமிழில் தெரிவிக்கத் தெரியாவிட்டால் முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதி விடுங்கள். உங்கள் கதையின் சாரத்தை ஆங்கில அறிவு இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது என்றால் அப்புறம் என்ன கதை எழுதும் திறன்?
உள்ளதைத் தானே காட்டுகிறோம் என்ற திரைத்துறையினர் போல் செயல்பட வேண்டாமே? குழந்தைகளுக்கு கதை சொல்பவர்களுக்கு பல விதங்களிலும் சமூகம், மொழி சார் பொறுப்பணர்வு உண்டு. ஆங்கில சொற்கள் அவர்களுக்குப் புரிந்தால் கூட முறையான தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்த வேண்டியது நம் கடமை. இன்று 100க்கு 5 சொற்கள் இக்கதையில் ஆங்கிலத்தில் இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 100க்கு 25 சொற்கள் ஆகும். அப்புறம் ஒரு கட்டத்தில் இது கதை முழுக்க ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதுவதில் தான் போய் முடியும்.
நன்றி அனானி.
பதிலளிநீக்குஏதோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கமாக இல்லாமல் உண்மை நிலையை விளக்கிக் கூறியுள்ளீர்கள்.ஒப்புக் கொள்கிறேன்.
இது போல முன்பும் ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது.
இனி முழுமையாகத் தமிழில் தர முயற்சிக்கிறேன்.
ஒரே ஒரு சந்தேகம் இதை நேரடியாகச் சொல்லாம ஏன் அனானியாக வந்தீர்கள்.
உங்கள் மேலான ஆலோசனைக்கு நன்றி.
உங்களோட பிளாகை பத்தி இந்தா வார விகடனில் வரவேற்பரையில் சொல்லி இருக்காங்க. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநானும் பார்த்தேன் பத்மா
பதிலளிநீக்குஇப்பத்தான் இந்த ஆண்ட்டியோட ரெண்டு 'குட்டிகளும்' சேர்ந்து பதிவு போடுறாங்க.
நன்றி.
My hearty congrats to the arumbugal team.
பதிலளிநீக்குthanks anony
பதிலளிநீக்குநன்றி! குழந்தைகளுக்கு நல்லதொரு இணைய இதழ் வாழ்த்துகள். நடைமுறையில் உள்ள தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி படைப்புகளைப் படைக்கவும். ஆங்கில கலப்பை வலிந்து திணிப்பதைத் தவிர்க்க வேண்டுகின்றேன். மீண்டும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநட்புடன்
அக்னிபுத்திரன்
//நடைமுறையில் உள்ள தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி படைப்புகளைப் படைக்கவும்.//
பதிலளிநீக்குநல்லது நல்லது
//அக்னிபுத்திரன்//
அக்னி என்பதும் புத்திரன் என்பதும் தமிழ் சொல் இல்லையே படவா? பெயரை மாத்து...........
It's a best news and keep going in the same manner. Thanking you for this great information. http://www.indonesiaflyers.com/
பதிலளிநீக்குகதை நல்லா இருக்கிறது
பதிலளிநீக்கு