சனி, 4 ஆகஸ்ட், 2007

யார் ஏழை?


ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளுக்கு ஏழைகள் எல்லாம் எப்படி இருப்பாங்க ன்னு காமிக்கிறதுக்காக ஒரு கிராமத்துக்கு கூப்டுட்டு போனார். ரெண்டு நாள் அந்த குடிசையில ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க.

திரும்ப வரும் போது, அப்பா கேட்டார், ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?... இப்ப என்ன சொல்றே?

மகன் சொன்னான் ''ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு ஆனா அவங்க கிட்ட நாலு இருக்கு...நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல் கார்டன்ல நடுவுல இருக்கு..ஆனா அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது... நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம்..ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது...நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது...ஆனா அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.. நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம்..ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க.. நம்மள பாதுக்காக்குறதுக்கு நம்மள சுத்தி சுவர் மட்டும் தான் இருக்கு...ஆனா இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க..

அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வச்சதுக்கு நன்றி அப்பா"னு சொன்னான்.

அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.

6 கருத்துகள்:

  1. டீச்சர் சொன்னாங்கன்ன உடனே குட்டீஸ் ஜங்சனுக்கு வந்தாச்சா! வெரிகுட் அவந்தி! அது போல படிப்பிலும் டீச்சர் சொன்ன மாதிரி ரேங்க் ஹோல்டரா வரணும் தெரியுதா! கதை சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. அருமையான & அட்டகாசமான கதை.

    வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும் அவந்திகா!

    பதிலளிநீக்கு
  3. அருமை அவந்தி இதுதான் ரியல் குட்டிக் கதை
    ஒரு சின்னக் குட்டியின் பார்வையில் ஏழை/பணக்காரனை அழகாச் சொல்லிட்டே.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா...

    என் மாதிரி ச்சின்ன பசங்களுக்கு வலைப்பதிவு இல்லையேன்னு நினைச்சிட்டு இருந்தேன்...இனி கவலையில்லை....ஹி..ஹி...

    டெய்லி ஒரு கத சொன்னீங்கன்னா நான் தெனமும் வருவேன் சரியா....

    பதிலளிநீக்கு
  5. அபி அப்பா...தேங்க்ஸ்..மிஸ் சொல்ற படி கேக்குற குட் கேர்ல் நான்
    நீங்க எல்லாம் wish பண்றீங்கில்ல அண்ணா...நல்லா மார்க் வாங்குறேன்

    தேங்கஸ் துளசி aunty...

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் மிஸ் guidance தான் கண்மணி அக்கா...

    பங்காளி அண்ணா...இந்த பிளாக் இப்பத்தான் பார்க்குறீங்களா...அப்ப உங்களுக்கு imposition குடுக்கனும்...

    டெய்லி கதை சொன்னா...அப்புறம் என்ன பார்த்தா ஓட ஆரம்பிச்சுறுவீங்க
    :-)))

    பதிலளிநீக்கு

netoops blog