சனி, 29 மார்ச், 2008
மழலையர் தமிழ்ப்பாடல்கள் தொகுப்பு-8
நத்தையாரே...நத்தையாரே
அத்தை வீடு பயணமோ
அத்தை வீடு போக முதுகில்
தண்ணீர் குடம் வேணுமோ
அத்தை வீடு போகும் வழியில்
தாகம் எடுக்குமே அதனால்
தண்ணீர் குடம் முதுகில்
நானும் சுமந்து போகிறேன்
காகம் ஒன்று வந்ததாம்
தாகத்தினால் தவித்ததாம்
சுற்றும் முற்றும் பார்த்ததாம்
ஜாடி ஒன்றைக் கண்டதாம்
அந்த ஜாடி அடியிலே
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
சிறிய சிறிய கற்களைப்
பொறுக்கிப் பொறுக்கி போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்.
பச்சைக்கிளியே பறந்து வா
பாலும் சோறும் திங்க வா
பாப்பா உன்னைப் பார்த்ததும்
பாடி ஆடி சிரிக்குதே
கொய்யாப்பழமும் நான் தருவேன்
கொஞ்சி நீயும் பேச வா
நெல்லும் மணியும் நான் தருவேன்
நித்தம் நீயும் ஓடி வா
வகை:
மழலையர் பாடல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
:)
பதிலளிநீக்குடீச்சர் சூப்பர் !!! :)
பதிலளிநீக்குடெம்ப்ளேட்டும் சூப்பர் :)
பதிலளிநீக்கு///பொன்வண்டு said...
பதிலளிநீக்குடெம்ப்ளேட்டும் சூப்பர் :)///
வழிமொழிகிறேன்.
நன்றி பிரியா
பதிலளிநீக்குபொன்வண்டு நிஜமா நல்லவன்