எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
இந்த கைவினைப் பொருட்கள் பகுதியில் உங்களுக்கு 'பயங்கரமான பேய் [ஆவி] பொம்மைகள் செய்யக் கத்துக் குடுக்கப் போறேன்.ஹ்ஹாஹ்ஹா.......
தேவையான பொருட்கள்:
பலூன்கள்
டிஷ்யூ பேப்பர் அல்லது வெள்ளை நிற கவரிங் பேப்பர்
நூல் கண்டு
மார்க்கர் பேனா அல்லது ஸ்கெட்ச் பேனா
ரப்பர் பேண்ட்
செய்முறை:
முதலில் பலூன் களை பெரிதாக ஊதி ரப்பர் பேண்ட் உதவியால் கட்டி வைக்கவும்.
பின்பு வெள்ளை ரேப்பர் பேப்பரை [கவரிங் பேப்பர்] விரித்து அதில் ஊதிப் பெரிதாக்கிய பலூனை வைத்து நன்கு மூடி [படத்தில் உள்ளது போல]மீண்டும் ரப்பர் பேண்ட் உதவியுடன் கட்டவும்.
மார்க்கர் அல்லது கலர் பேனாவினால் ஒவ்வொரு பேப்பர் சுற்றிய பலூன் மீதும் உருவங்களை வரையவும்.
நீண்ட நூலை எடுத்து பலூனுடன் கட்டப் பட்ட ரப்பர் பேண்ட் உடன் இணைத்துபறக்க விட்டால் பயங்கரமான பேய் பொம்மைகள் காற்றில் ஆடும்.
இரவில் அல்லது இருட்டு அறையில் தெரிய வேண்டுமானால் சாதாரண கலருக்கு பதில் 'க்ளோ' பெயிண்ட் அல்லது பேப்பர் ஒட்டி வெட்டினால் இருளிலும் உருவங்கள் தெரியும்.
குறிப்பு:உங்கள் நண்பர்கள் பிறந்த நாளான்று அல்லது முட்டாள்கள் தினத்தில் ஏமாற்றவோ மட்டுமே செய்து பார்க்கலாம்.
அடிக்கடி இப்படி செய்து பயம் காட்டக் கூடாது.சரியா?
Super!!!Nalla Irukku Pongal Holidaysla thaan seiya Mudiyumnu Nenaikiran!!
பதிலளிநீக்கும்ம்... நல்லா இருக்கு.. நானும் செய்து பார்க்கிறேன்..
பதிலளிநீக்குமைண்டில் வெச்சுக்குறேன்
பதிலளிநீக்குஅருமை - பசங்களே விளையாடறதுக்கு பயன் ப்ப்ப்டுத்தச் சொல்லலாமே - சொல்லுறேன்
பதிலளிநீக்கு