Monday, October 1, 2007

சுருள் படங்கள் செய்வோமா?

படம் வரைந்து சலிப்பாக இருக்கின்றதா?

வாருங்கள் ஒரு புது வகையான வரையும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்





  • வர்ண காகிதங்கள்

  • தூரிகை/பென்சில்











முதலில் ஒரு வர்ண தாளை எடுத்து அதை 1 cm அகலத்திற்கு வெட்டி கொள்ளவும் .







தூரிகை எடுத்துக் கொள்ளுங்கள்.வெட்டிய தாளை அதன் பிடியில் இறுக்கமாக சுருட்டி கொள்ளவும்













முழுமையாக சுற்றி முடித்த பின் தூரிகையை வெளியே எடுத்து விடுங்கள்
இப்பொழுது உங்களுக்குப் படத்தில் காட்டப்படுள்ளது போல சுருள் தாள் கிடைக்கும்.


இதே மாதிரி பல வண்ணங்களிலும்,அகலங்களிலும் சுருள் தாட்களை தயாரிக்கலாம்













நீங்கள் நீண்ட காகிதங்களை உபயோகித்தால் இன்னும் நீண்ட சுருள்கள் கிடைக்கும்





இந்த படத்தில் உள்ள நீல தாள் பாதி அளவிற்கு மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு
இந்த மாதிரி நேர்தியான தாள்,இறுதியில் மட்டுமே சுருளுடன் கிடைக்கும்.இது ஒரு வகை சுருள்




அடுத்த முறை தாளின் இருப்பக்கமும் சுருள் இருக்கும்.இப்படி செய்ய அதன் இறுதியில் மட்டும் தூரிகையால் சுருட்ட வேண்டும்,பிறகு இதே மாதிரி அடுத்த இறுதியையும் சுருட்ட வேண்டும்




சரி இப்படி சுருட்டிய தாட்களை வைத்து என்ன செய்வது?படங்களைப் பாருங்கள்.இந்த மாதிரி சுருள்களை வைத்து அதை ஒட்டி இந்த மாதிரி புதுவகையான படங்களை நீங்களும் தயாரிக்கலாம். முயன்று பாருங்கள்.வாழ்த்துக்கள்







நன்றி:ART ATTACK



9 comments:

  1. நல்லாயிருக்கே துர்கா.முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. \\கண்மணி said...
    நல்லாயிருக்கே துர்கா.முயற்சிக்கிறேன்.\\

    யக்கோவ்...என்ன வேண்டுதலா?
    ஒரே பின்னூட்டத்தை 4முறை போட்டுயிருக்கிங்க... ;))

    ReplyDelete
  3. வலது பக்க அணிலை சின்னது பண்ணா,பயப்படாமல் செய்து பார்க்க முடியும்.
    :-))
    ஆமாம் அது அணிலா? எந்தூரில் இருக்கு.

    ReplyDelete
  4. Thank u 4 posting this Durga!!!!!!!!!!!

    ReplyDelete
  5. நல்லா இருக்குங்க.இது போல நிறைய செஞ்சு காட்டுங்களேன்

    ReplyDelete
  6. ரொம்ப நல்லாருக்கே ... இந்த படம்.

    ReplyDelete
  7. ரொம்ப நல்லாருக்கு. நானும் செய்யப்போகிறேன். இன்னும் இது போல் வேறு சில கைவேலைகளும் செய்து காட்டவும்

    ReplyDelete

netoops blog