Sunday, July 1, 2007

ஆடு...புலி...புல்லுக்கட்டு...

புதிர்:1

ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில் இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து வர வேண்டும்.

அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.

புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத் தின்றுவிடும்.

புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி ஆட்டைக் கொன்று விடும்.

இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை சேர்க்கனும்னா

எப்படிக் கொண்டு போவது?

புதிர்:2

ஒரு ஆற்றின் இரு கரையிலும் ஒரு பக்கம் மூன்று பேய்கள்.மறு பக்கம் மூன்று மனிதர்கள்.

இரண்டு செட்டையும் அப்படியே ஒரு கரையிலிருப்பதை மறு கரைக்கு இடம் மாற்றனும்.

ஒரே ஒரு படகு இருக்கு.ஒரு படகில் ஒரு நேரத்தில் இருவரை மட்டுமே அழைத்துப் போக முடியும்.

ஒரு கரையில் விட்டுத் திரும்பும் போது பேய்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆபத்து.

அதாவது பேய்கள் இரண்டாகவும் மனிதன் ஒன்றாகவும்[விட்டால்] இருந்தால் பேய்கள் மனிதனைக் கொன்றுவிடும்.

இதைக் கவனத்தில் கொண்டு எப்படி இடம் மாற்றுவீர்கள்?

யோசிச்சி வைங்க குட்டீஸ்

எப்படியும் சிபி முதல்ல அட்டெண்டன்ஸ் குடுத்துடுவார்.
ஓகே ஜூட்

17 comments:

  1. //எப்படியும் சிபி முதல்ல அட்டெண்டன்ஸ் குடுத்துடுவார்.
    ஓகே ஜூட்
    //

    :)

    நம்பிக்கைய வீணாக்கலாமா! அதான் வந்துட்டேன்!

    ReplyDelete
  2. நாங்களும் ட்ரை பண்ணலாமா? டீச்சர்!

    ReplyDelete
  3. மொத போட்ட்ட இங்கிலீஸு புதிர சால்வ் பண்ணிங்களா?
    இப்ப ஆடு,கோழின்னதும் பிரியாணிக்கு வந்திட்டீங்க.
    ஓகே கண்டுபுடிங்க பார்ப்பம்.
    கெலிச்சா பிளாக்குல உங்க படம் போடுவம்.

    ReplyDelete
  4. //மொத போட்ட்ட இங்கிலீஸு புதிர சால்வ் பண்ணிங்களா?
    //

    இதான வாணாங்குறது!

    நமக்குத்தான் இங்கிலீஷ் வராதே!

    ReplyDelete
  5. ஓகே முதலாவது!

    1.முதல்ல ஆட்டைக் கூட்டிட்டுப் போய் அக்கரைல விட்டுட்டு வரணும்.

    2. செகண்ட் ட்ரிப்ல புல்லுக் கட்டு அந்தப் பக்கம் போகணும்.

    3. ரிடர்ன் வரப்போ ஆட்டை இந்தப் பக்கம் இட்டாந்துடணும்.

    4. மூணாவது ட்ரிப் நாகை சிவா அந்தப் பக்கம் போகணும்.

    5.நாலாவது ட்ரிப்லே ஆட்டை அந்தப் பக்கம் கொண்டு போக வேண்டியதுதான்!

    ReplyDelete
  6. ஆகா கெலிச்சிட்டீங்க ரெண்டாவது பேய் புதிர்?

    ReplyDelete
  7. ரெண்டாவது :

    1.முதல் ட்ரிப் : -> இரண்டு பேய்கள்

    2. 2வது ட்ரிப் : -> மீதமுள்ள ஒரு பேய் + ஒரு மனிதன்

    3. ரிடர்ன் ட்ரிப் : <- ஏற்கனவே கொண்டு போன இரண்டு பேய்கள்

    4. 3 வது ட்ரிப் : -> இரண்டு மனிதர்கள்

    5. 4வது ட்ரிப் : -> மீதமிருக்கும் இரண்டு பேய்கள்!

    ReplyDelete
  8. எந்த டிரிப்பும் எம்டியாப் போகக் கூடாது.இது ரூல்ஸ்

    ReplyDelete
  9. போன புதிர்க்கு பரிசு தந்தாதான் இதுக்கு பதில் சொல்வேன்.
    எங்கே எனக்கு பரிசு??

    ReplyDelete
  10. கங்க்ராட்ஸ் போட்டதை பெரிசா கலர்கலரா போடுங்க. தெரியவே மாட்டேங்குது.

    ReplyDelete
  11. தனிமடல் தனிமடல் உங்கள் பார்வைக்கு மட்டும்...தனிமடல் தனிமடல் உங்கள் பார்வைக்கு மட்டும்...
    தனிமடல் தனிமடல் உங்கள் பார்வைக்கு மட்டும்...

    -- நானனுப்பிய தனிமயிலும் அதன் முகவரியும் கிடைத்ததா?
    -- நீங்களும் கேட்டதின் படி எட்டுபதிவு போட்டுட்டேன். பார்த்திட்டீங்களா?

    ReplyDelete
  12. // நாமக்கல் சிபி said...
    ஓகே முதலாவது!

    1.முதல்ல ஆட்டைக் கூட்டிட்டுப் போய் அக்கரைல விட்டுட்டு வரணும்.

    2. செகண்ட் ட்ரிப்ல புல்லுக் கட்டு அந்தப் பக்கம் போகணும்.

    3. ரிடர்ன் வரப்போ ஆட்டை இந்தப் பக்கம் இட்டாந்துடணும்.

    4. மூணாவது ட்ரிப் நாகை சிவா அந்தப் பக்கம் போகணும்.

    5.நாலாவது ட்ரிப்லே ஆட்டை அந்தப் பக்கம் கொண்டு போக வேண்டியதுதான்//

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  13. First two men
    then one peyi
    leave peyi and take the man
    leave man and take the two peyi to the other side.
    fini

    Sengkamalam

    ReplyDelete
  14. //Anonymous said...

    First two men
    then one peyi
    leave peyi and take the man
    leave man and take the two peyi to the other side.
    fini

    Sengkamalam//

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  15. \\ அபி அப்பா said...
    // நாமக்கல் சிபி said...
    ஓகே முதலாவது!

    1.முதல்ல ஆட்டைக் கூட்டிட்டுப் போய் அக்கரைல விட்டுட்டு வரணும்.

    2. செகண்ட் ட்ரிப்ல புல்லுக் கட்டு அந்தப் பக்கம் போகணும்.

    3. ரிடர்ன் வரப்போ ஆட்டை இந்தப் பக்கம் இட்டாந்துடணும்.

    4. மூணாவது ட்ரிப் நாகை சிவா அந்தப் பக்கம் போகணும்.

    5.நாலாவது ட்ரிப்லே ஆட்டை அந்தப் பக்கம் கொண்டு போக வேண்டியதுதான்//

    ரிப்பீட்டேய்! \\


    தலைவா...ரிப்பீட்டேய்...நானும் சென்ஷியும் தான் சொல்வோம். நீங்க எல்லாம் சொல்லக்கூடாது

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. புதிர் 2:

    First trip, he takes one man to the other side.

    Then, on his return trip, he takes two ghosts with him.

    Again he takes two men to the other side.

    Now one ghost left and he takes the ghost with him to the other side on his return trip.

    ReplyDelete

netoops blog