ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.
அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான்.
தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.வகுப்பிலும் அவன் தான் முதலிடம்.
அவர்களுடைய அம்மா பெரிய மகன் அலைந்து திரிந்து மாடுகளை மேய்க்கிறான் என்பதற்காக அவனுக்கு நல்ல சாப்பாடு,முட்டை, பால் எல்லாம் கொடுப்பார்.
தம்பி பாடம்தானே படிக்கிறான் அவனுக்கு அதிக உழைப்பு இல்லை என்பதால் அண்ணனுக்குக் கொடுப்பதை விட குறைவாகவே கொடுப்பார்.
ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு உறவுக்கார பாட்டி வந்தாங்க.
அம்மா செய்வதைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க அம்மா கடினமான உழைப்பு மாடு மேய்ப்பவனுக்குத்தானே படிப்பவனுக்கு அவ்வளவு சக்தி விரையமாகாது என்றாள்.
பாட்டி சொன்னாங்க பெரியவன் மாடுகளை வயலில் அவிழ்த்து விட்டு விட்டு நன்றாக மரத்தடியில் படுத்துத் தூங்குகிறான்.
அவனுக்கு எந்த கவலையும் இல்லை.
ஆனால் படிப்பவனுக்குத்தான் அதிக உழைப்பு தேவைப்படும்.பாடங்களைப் படிக்கவும்,எழுதவும் ,மனனம் செய்யவும் ,பரீட்சைக்குத் தயாராகவும் என இவனுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும்.
மேலும் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் செய்கிறான்.
இப்படி படிக்க விளையாட என அதிக சக்தி தேவைப் படும். படிப்பது என்பது சுலபமல்ல என்று கூறினாள்.
இதைச் சோதித்துப் பார்க்க அம்மாவுக்கு ஒரு உபாயமும் சொன்னாள்.
இரவு தூங்கும் போது இருவரின் தொண்டைக்குழியிலும் ஒரு உருண்டை வெண்ணையை வைக்கச் சொன்னாள்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணை அப்படியே இருந்தது.
படிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது.
பாட்டி சொன்னாள் 'படிப்பவனுக்கு எந்த நேரமும் அதே சிந்தனை,கவலை ,பயம்.அதனால் உடல் சூடாகி வெண்ணை உருகி விட்டது.
ஆனால் மாடு வீட்டுக்கு வந்த பிறகு மறு நாள் வரை பெரியவன் கவலைப் படுவதில்லை.
எனவே அவன் உடல் குளிர்ச்சியாக இருக்கிறது.எனவேதான் வெண்ணை உருகவில்லை.
அம்மா புரிந்து கொண்டு படிக்கும் சின்ன மகனுக்கும் நல்ல உணவு,பால்,பழம் எல்லாம் தரத் தொடங்கினாள்.
குட்டீஸ் படிப்பதாலும், விளையாடுவதாலும் வீணாகும் சக்திக்கு ஈடு செய்ய நீங்கள் நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிடப் பழகனும்.காய்கறிகள்,கீரைவகைகள்,பழங்கள் பால் எல்லாம் சாப்பிடனும்.
சில குட்டீஸ் காய்கறிகளே சாப்பிட மாட்டாங்க.
சிலபேர் பால் வாசனை பிடிக்காதுன்னு நோ சொல்லிடுவாங்க.
சில குட்டீஸ் சாப்பாடு சாப்பிடாம ஒன்லி 'நொறுக்ஸ்' [ஸ்நேக்ஸ்] மட்டும் சாப்பிடுவாங்க.
வெறும் ஸ்நேக்ஸ்,சாக்லெட்ஸ்,பிஸ்கட்ஸ் மட்டும் சாப்பிடுதலும் பெப்ஸீ,கோக் மட்டுமே அடிக்கடி குட்ப்பதும் தப்பு.
ஆண்ட்டியின் இந்தப் பதிவையும் படிங்க புரியும்.
ஓகே பை குட்டீஸ்.
அன்புடன் கண்மணி ஆண்ட்டி.
uLLEn teacher...
பதிலளிநீக்கு//ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.//
பதிலளிநீக்குannan thambi rendu perthaane teacher?
//தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.//
பதிலளிநீக்குannan athai vida keddikkaaran.. pallikku pogaamalEyE padikkalai.. :-P
//மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணை அப்படியே இருந்தது.
பதிலளிநீக்குபடிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது.//
paaddi raavOdu raava, awtha vennaiyai maaththi vachiddaanggalo?
//சில குட்டீஸ் காய்கறிகளே சாப்பிட மாட்டாங்க.
பதிலளிநீக்குசிலபேர் பால் வாசனை பிடிக்காதுன்னு நோ சொல்லிடுவாங்க.
//
uNmaiyai sollungga. ithai yaarai nenachu ezhuthineengga? ;-)
யார்ரங்கே பியூன் இங்க வாப்பா இந்த நாட்டி ஸ்டூடண்ட் மை பிரண்ட்ட HM ரூமுக்கு அழைச்சிட்டுப் போ. ரொம்பக் குறும்பு செய்யுது.
பதிலளிநீக்குகதை மூலம் நல்லதொரு அறிவுரை,கண்மணி.
பதிலளிநீக்குnice post for kuttis
பதிலளிநீக்குPresent Teacher
பதிலளிநீக்குஇதுபோல் குட்டிக்கதைகள் குட்டீஸ் சூழ உட்கார்ந்து சொல்ல மிகவும் பிடிக்கும்.அவர்கள் அதை உள்வாங்கும்
பதிலளிநீக்குவிதமும் கேட்கும் குறுக்குக்கேள்விகளும் மேலும் மேலும்
சொல்லத்தூண்டும்.
அருமையான கதை கண்மணி!
அருமையான கதை
பதிலளிநீக்குஇந்தக் கதையும் நல்லா இருக்கே!
பதிலளிநீக்குஇனிமே நானும் காய்கறியெல்லாம் நல்லா சாப்பிடுதேன் டீச்சர்!