ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானே
இப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.

ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாக பயன்படுவது.உண்மையில் இவை அர்த்தமற்ற கிறுக்கல்கள்தான்.
உங்க வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது 'போர்' அடிச்சா என்ன செய்வீங்க?இல்லை வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்கும் போதோ அல்லது ஏதோ சிந்தித்தபடியே இருக்கும் போது உங்க கையில் ஒரு பேப்பரும் பேனாவும் அல்லது பென்சிலோ கிடைத்தால் எதையாச்சும் கிறுக்குவீங்கதானே. பிறகு அது என்னன்னு பார்த்தா ஆளுக்கொரு விதமா தோன்றும்.அதுக்குத்தான் 'டூடுல்ஸ்' [doodle]னு பேர்.
வீட்டில் போன் பேசும் போது சிலபேர் போன் புத்தகத்தில் எதையாவது வரைவாங்க.சில மாணவர்கள் வகுப்பில் எதையாவது கிறுக்கி ஒரு அவுட்லைன் போல கோடுகள் வரைந்து இது கணக்கு வாத்தியார் இது தமிழ் அய்யா னு குறும்பு செய்வாங்க.
இந்த மாதிரி அர்த்தமற்ற கிறுக்கல்களுக்கு கோட்டுச் சித்திரங்கள் [டூடுல்ஸ்]னு பேர்.
அதையே ஒரு 'புதிர்' [riddle] போல மாற்றி என்னன்னு கண்டு பிடிக்கச் சொன்னால் அதுக்குத்தான் ட்ரூடுல்ஸ் னு பேர்.
டூடுல்ஸ் [doodles] +ரிடில்ஸ் [riddles]=ட்ரூடுல்ஸ் [droodles] சரியா?
இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் ப்ரைஸ் என்னும் காமெடி எழுத்தாளர்.1950 களில் இது குறித்த புத்தகங்களை எழுதினார்.பின்னர் லியனார்ட் ஸ்டெர்ன் என்னும் தன் நண்பருடன் சேர்ந்து மேட் லிப்ஸ் [mad libs] என்னும் கதை சொல்லும் விளையாட்டை உருவாக்கினார்.
அந்தக் காலத்துல தமிழ்வாணன் என்ற தமிழ் நாவலாசிரியர் கூட தன் துப்பறியும் கதைகளில் இப்படி கோட்டுச் சித்திரங்களைப் பயன்படுத்தியிருக்கார்.
பின்னர் தொலைக்காட்சிகளில் 'கேம் ஷோ' எனப்படும் நிகழ்ச்சிகளில் இந்த ட்ரூடுல்ஸ் பிரதான இடம் பிடித்தது.நோட்டுப் புத்தகங்கள் சுவர் விளம்பரங்கள் ஷாப்பிங் பைகள் எல்லாவற்றிலும் இந்த கிறுக்கல் சித்திரங்கள் இடம் பிடித்தன.
முதலில் பார்க்கும் போது அர்த்தமற்ற கிறுக்கள்களாக தெரிந்தாலும் உற்று நோக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தெரியும் எனவே இந்த வகைப் புதிர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான 'பதில்கள்' இருக்கக் கூடும்.
இந்த வகை விளையாட்டுக்கள் ஞாபக சக்தி,கற்பனைத் திறன்,புதுப் புது சிந்தனைகளை வளர்க்க உதவும்.
உங்க பார்வைக்கு சில கீழே உள்ளன.


இது i என்ற எழுத்தின் நிழல் [அ] ஐ ஷேடோ [ஒரு முக அலங்காரம்]


இது தொப்பி அணிந்த உருவம் [அ] முறுக்கி விடப்பட்ட மீசை

இது கண் பரிசோதனை ஆஸ்பிட்டலில் உள்ள பலகை
[அ] இதில் L என்ற எழுத்து இல்லை.எனவே NO 'L' ஆகும். Noel என்றால் கிறிஸ்துமஸைக் குறிக்கும்.





என்ன சுவாரஸ்யமா இருக்கா?சரி .
கீழே கட்டத்தில் உள்ள வரை படங்களைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து நிறைய புதுப் புது ட்ரூடுல்ஸ் உருவாக்கலாம்.உங்க நண்பர்களோடு விளையாடலாம்.[விடுமுறையில்]

nice information.interesting
பதிலளிநீக்குClassic!!!
பதிலளிநீக்குமிகவும் கவனத்தை ஈர்த்தது. தெரியாத தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி அனானி,விஜய் ஆனந்த்,தமிழ்ப் பறவை
பதிலளிநீக்குnice information.interesting
பதிலளிநீக்குQuite interesting.
பதிலளிநீக்குnew and interesting
பதிலளிநீக்குநன்றி தமிழ்ப் பிரியன்,அமுதா,தேவன்
பதிலளிநீக்குsuper:):):)
பதிலளிநீக்குஏற்கனவே ஆங்கிலத்தில் நிறைய படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமீண்டும் உங்கள் தமிழ் விளக்கத்தில் இரசித்தேன்.
ரொம்பவே புதுசான தகவல்கள், எழுதிய விதம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇது போன்றே தொடருங்கள், குட்டீஸுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உதவும்.
:))nice
பதிலளிநீக்குரசித்தேன் .........
பதிலளிநீக்குதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .........