வியாழன், 28 ஜூன், 2007

கணபதிக்கும் ஒன்னு...கந்தனுக்கும் ஒன்னு



தேவலோகத்தில் பார்வதியும் பரமசிவனும் பேசிக் கொண்டிருந்தனர்.

தங்கள் பிள்ளைகளில் யார் புத்தி சாலி என்பதை ஒரு சோதனை வைத்துக் கண்டு பிடிப்போம் என்று.
அதன்படி சிவன் தன் பிள்ளைகளான கணபதி,கந்தன் இருவரையும் கூப்பிட்டார்.

'பிள்ளைகளே உங்களில் யார் சூழ்நிலைக்குத் தக்கபடி புத்திசாலித் தனமாக செயல்படுகிறீர்களோ அவருக்கு பரிசாக மாம்பழம் தருவேன்.
போட்டி இதுதான் உங்களில் யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ அவருக்கே பரிசு'என்றார்.

கணபதியும் ,கந்தனும் அப்படியே செய்கிறோம் தந்தையே என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து கணபதி வர,அதற்குப் பிறகு கந்தன் வந்தார்.
'என்ன உங்களில் யார் முதலில் உலகைச் சுற்றி வந்தவர்' சிவன் கேட்க
'நான் தான் தந்தையே என்னுடைய மயில் மீது ஏறி முதலில் வலம் வந்தேன்.ஆனால் அண்ணன் எப்படி எனக்கு முன்னால் இங்கு?'என கந்தன் கேட்க

கணபதி சிரித்தபடி,'நான் தான் முதலில் சுற்றி வந்தவன்.ஒருவருக்கு பெற்றெடுத்த தாய்,தந்தையர்தானே உலகம்.அதனால் நான் அம்மையப்பனைச் சுற்றி வந்தேன்.இது உலகத்தையே சுற்றீ வந்த மாதிரி.எனவே எனக்குத்தான் பழம்' என்றார்.

'இல்லை இதை நான் ஏற்க மாட்டேன் .தந்தை சொன்னது அகில உலகத்தையும் சுற்றி வர வேண்டும் என்று. நீ செய்ததை நான் ஒப்புக் கொள்ள முடியாது என கந்தன் வாதிட,

பார்வதி தேவி இதென்ன சோதனையெனக் கலங்க,சிவன் மட்டும் புன்முறுவலுடன்
கணபதிக்கு ஒன்று,கந்தனுக்கு ஒன்று என் இரண்டு மாம்பழங்களை ஆளுக்கு ஒன்றாகத் தந்தார்.

'தந்தையே அண்ணனுக்கு பழம் தந்தது எனக்கு வருத்தமில்லை.ஆனாலும் ஜெயித்தவன் நான் தானே சொல்லுங்கள்' என கந்தன் கேட்க

சிவன்,'குழந்தைகளே ஜெயித்தது நீங்கள் இருவருமேதான்'என்றதும் பிள்ளைகளோடு பார்வதியும் சேர்ந்து குழம்ப,

'ஒருவனுக்கு உயிர் கொடுத்து அவனை உருவாக்கி,கல்வி கேள்விகளில் சிறக்கச் செய்வது அவன் தாய்தந்தையர்.அவனுக்கான உலகத்தை வடிவமைத்துக் கொடுப்பது அவர்கள்தான்.அதனால் பெற்ற்வர்களைத் தன் உலகமாக நினைப்பது சரியே.இது உணர்வுபூர்வமானது.தியரிடிகல் லாஜிக்.இதைத்தான் கணபதி செய்தான்.

அதே நேரம் உலகம் என்றதும் அண்டசராசரங்களையும் ,கோள்களையும் அடக்கியதுதான் உலகம் என்பது கந்தனின் வாதம்.இதுவும் சரியே.இது பிராக்டிக்கல் லாஜிக்.

இருவரும் அவரவர் கோணத்தில் சிந்தித்து செயல்பட்டீர்கள்.ஓரே மாதிரி சிந்தித்து முன்னும் பின்னுமாக வந்திருந்தால் ஒருவர் மட்டுமே வென்றதாகக் கூறியிருப்பேன்.வெவ்வேறு கோணத்தில் சுயமாக சிந்தித்து செயல்பட்டதால் என்னைப் பொறுத்தவரை இருவருமே வெற்றி பெற்றவர்கள்தான்.

என்ன தேவி என் வாதம் சரியா 'என

எப்படியோ இரண்டு பேருக்கும் சண்டை வராமல் பழம் கிடைத்ததே என்று அந்தத் தாயுள்ளம் ஆமோதித்தது.

3 கருத்துகள்:

  1. கண்மனி ஆன்ட்டி,
    சிவனும் பார்வதியும் குடுத்த மாம்பழத்தை பிள்ளையாருக்கு குடுக்க‌
    முருகன் போய் ஃப்ரூட்டி வாங்கி குடிச்சுட்டு மாங்கோ ஃப்ரூட்டி!ஃப்ரெஷ் ந் ஜூஸி னு பாடுன கதை தெரியாதா?

    பதிலளிநீக்கு
  2. ஆஹா இப்படிக் கூட சொல்லியிருக்கலாம்.வெரி நைஸ் அம்மினி

    பதிலளிநீக்கு
  3. ஆண்ட்டி உம்மாச்சி கத வேணாம்.வெற கத சொல்லுங்க

    பதிலளிநீக்கு

netoops blog