வியாழன், 28 ஜூன், 2007

கணபதிக்கும் ஒன்னு...கந்தனுக்கும் ஒன்னு



தேவலோகத்தில் பார்வதியும் பரமசிவனும் பேசிக் கொண்டிருந்தனர்.

தங்கள் பிள்ளைகளில் யார் புத்தி சாலி என்பதை ஒரு சோதனை வைத்துக் கண்டு பிடிப்போம் என்று.
அதன்படி சிவன் தன் பிள்ளைகளான கணபதி,கந்தன் இருவரையும் கூப்பிட்டார்.

'பிள்ளைகளே உங்களில் யார் சூழ்நிலைக்குத் தக்கபடி புத்திசாலித் தனமாக செயல்படுகிறீர்களோ அவருக்கு பரிசாக மாம்பழம் தருவேன்.
போட்டி இதுதான் உங்களில் யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ அவருக்கே பரிசு'என்றார்.

கணபதியும் ,கந்தனும் அப்படியே செய்கிறோம் தந்தையே என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து கணபதி வர,அதற்குப் பிறகு கந்தன் வந்தார்.
'என்ன உங்களில் யார் முதலில் உலகைச் சுற்றி வந்தவர்' சிவன் கேட்க
'நான் தான் தந்தையே என்னுடைய மயில் மீது ஏறி முதலில் வலம் வந்தேன்.ஆனால் அண்ணன் எப்படி எனக்கு முன்னால் இங்கு?'என கந்தன் கேட்க

கணபதி சிரித்தபடி,'நான் தான் முதலில் சுற்றி வந்தவன்.ஒருவருக்கு பெற்றெடுத்த தாய்,தந்தையர்தானே உலகம்.அதனால் நான் அம்மையப்பனைச் சுற்றி வந்தேன்.இது உலகத்தையே சுற்றீ வந்த மாதிரி.எனவே எனக்குத்தான் பழம்' என்றார்.

'இல்லை இதை நான் ஏற்க மாட்டேன் .தந்தை சொன்னது அகில உலகத்தையும் சுற்றி வர வேண்டும் என்று. நீ செய்ததை நான் ஒப்புக் கொள்ள முடியாது என கந்தன் வாதிட,

பார்வதி தேவி இதென்ன சோதனையெனக் கலங்க,சிவன் மட்டும் புன்முறுவலுடன்
கணபதிக்கு ஒன்று,கந்தனுக்கு ஒன்று என் இரண்டு மாம்பழங்களை ஆளுக்கு ஒன்றாகத் தந்தார்.

'தந்தையே அண்ணனுக்கு பழம் தந்தது எனக்கு வருத்தமில்லை.ஆனாலும் ஜெயித்தவன் நான் தானே சொல்லுங்கள்' என கந்தன் கேட்க

சிவன்,'குழந்தைகளே ஜெயித்தது நீங்கள் இருவருமேதான்'என்றதும் பிள்ளைகளோடு பார்வதியும் சேர்ந்து குழம்ப,

'ஒருவனுக்கு உயிர் கொடுத்து அவனை உருவாக்கி,கல்வி கேள்விகளில் சிறக்கச் செய்வது அவன் தாய்தந்தையர்.அவனுக்கான உலகத்தை வடிவமைத்துக் கொடுப்பது அவர்கள்தான்.அதனால் பெற்ற்வர்களைத் தன் உலகமாக நினைப்பது சரியே.இது உணர்வுபூர்வமானது.தியரிடிகல் லாஜிக்.இதைத்தான் கணபதி செய்தான்.

அதே நேரம் உலகம் என்றதும் அண்டசராசரங்களையும் ,கோள்களையும் அடக்கியதுதான் உலகம் என்பது கந்தனின் வாதம்.இதுவும் சரியே.இது பிராக்டிக்கல் லாஜிக்.

இருவரும் அவரவர் கோணத்தில் சிந்தித்து செயல்பட்டீர்கள்.ஓரே மாதிரி சிந்தித்து முன்னும் பின்னுமாக வந்திருந்தால் ஒருவர் மட்டுமே வென்றதாகக் கூறியிருப்பேன்.வெவ்வேறு கோணத்தில் சுயமாக சிந்தித்து செயல்பட்டதால் என்னைப் பொறுத்தவரை இருவருமே வெற்றி பெற்றவர்கள்தான்.

என்ன தேவி என் வாதம் சரியா 'என

எப்படியோ இரண்டு பேருக்கும் சண்டை வராமல் பழம் கிடைத்ததே என்று அந்தத் தாயுள்ளம் ஆமோதித்தது.

புதன், 27 ஜூன், 2007

காகமும் நரியும் ..பாட்டி சுட்ட வடையும்

ஒரு காகம் பறந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியிலே ஒரு பாட்டி வடை
சுட்டுக் கொண்டிருப்பதை பார்த்தது.

அந்த மரத்துக் கிளை மேலே பறந்து போய் உட்கார்ந்து கொண்டு பாட்டியைப் பார்த்து,
'ஹாய் பறவை முனியம்மா பாட்டி ஹௌ ஆர் யூ ' என்று கேட்டது.

பாட்டி ஆச்சரியத்தோடு,'ஹாய் காக்கா ஐ யாம் ஃபைன் ஆமாம் என் பேரு உனக்கு எப்படித் தெரிந்தது'என்று கேட்டாள்.

'நான் தான் வாராவாரம் சன் டிவியில நீ சமைக்கிறத பார்த்திருக்கேனே'

'அது சரி இப்ப எதுக்கு இங்க வந்தே வடை திருடத்தானே'

'நோ நோ டோன்ட் மிஸ்டேக் மீ ஐ யாம் நாட் அ தீஃப் .வடை சுடும் வாசனையைப் பார்த்து வாங்கிச் சாப்பிட வந்தேன்'

'சரி சரி இந்தா சாப்பிட்டுப் பாரு'என பாட்டி குடுக்க

காகம் கேட்டுது,'ஆமா இது பிரீ ஹீட் பண்ண எண்ணையில சுட்டதா?'

'பிரீ ஹீட்டுன்ன்னா?இது ரிபைன்ட் ஆயில்லதான் சுட்டேன்'

'பிரீ ஹீட்டுன்னா நெறய முறை வாணலியில் சூடுபடுத்தி உபயோகப் படுத்தனது.அதைத் திரும்பத் திரும்ப சுட வைக்கும் போது அதன் குணம் மாறி உடம்புக்கு கெடுதல் செய்யும்.வயிற்றுக் கோளாறு,அல்சர்,அஜீரணம் எல்லாம் வரும்.ஏன் தொடர்ந்து யூஸ் பண்ணா கேன்சர் கூட வரலாம்'

'ஓ அப்படியா? இது சுத்தமான ஆயில்தான் சுட்டேன் .
இனி நான் அடிக்கடி சூடுபடுத்தியதை உபயோகிக்க மாட்டேன்.
தகவலுக்கு நன்றி.
இந்தா நீ இவ்ளோ நல்லவனா பொய் சொல்லாம திருடாம இருப்பதால் உனக்கு ஃபிரீயாவே ஒரு வடை தரேன்'என்று முனியம்மா பாட்டி வடையைக் கொடுத்தாள்.

காகம் வடையுடன் இருப்பதைப் பார்த்த ஒரு நரி தந்திரமாக அதை அபகரிக்க எண்ணி,
'ஹல்லோ மிஸ்டர் காகம் யூ ஆர் வெரி பியூட்டிஃபுல் அண்டு ய குட் சிங்கர் டூ.
ஃப்ளீஸ் எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்' என்றது.

காகம் ,'ஹலோ மிஸ்டர் நரி இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட பலிக்காது.உனக்கு வடை வேணும்னா அங்க கண்மணி ஆன்ட்டி ஒரு பஸுல் [புதிர்] போட்டிருக்காங்க அதுக்கு சரியான பதில் சொன்னா நானே இதை உனக்குத் தரேன் என்றது.

காகம் சொன்னதைக் கேட்ட நரி இதை ஏமாத்த முடியாது எனப் புரிந்து கொண்டு ஓடி விட்டது.

ஹாய் குட்டீஸ் கதை எப்படி ஓகே வா?புடிச்சிருக்கா?

சீக்கிரம் உங்க வீட்டுப் பெரியவங்க உதவியோட புதிரைக் கண்டுபிடித்து வின்னர் ஆகுங்க குட்டீஸ்

பை
கண்மணி ஆன்ட்டீ

செவ்வாய், 26 ஜூன், 2007

கண்டுபிடிங்க குட்டீஸ்...''சயாமீஸ் இரட்டையர்'' யார்?

ஹாய் குட்டீஸ்

கண்மணி ஆண்ட்டீ ஸ்பீக்கிங்

உங்களுக்காக ஒரு புதிர்.[puzzle]
but in english
hope you all will do it correct


best of luck

findout the siamese twins in these following list.
hope you all know about 'siamese twins' a pair looking exactly alike.it is refered to twin children.
here i ask you to findout and match the 'pair' of words which have similar meaning and so called as 'siamese twins';);)ok?
ready......

1.bits and-------
2.---------and span
3.leaps and ------
4.------and latters
5.adds and------
6.------and soul
7.fair and------
8.------and kin
9.hue and------
10.------and thin
11.bow and------
12.------and ready
13.ways and------
14.bill and------
15.-------and thrust


answers to pick up:1.cut 2.coo 3.means 4.rough 5.scrape
6.thick 7.cry 8.kith 9.square 10.ends
11.heart 12.rags 13.bounds 14.spick 15.pieces



diski:answers will be given on friday

வெள்ளி, 22 ஜூன், 2007

வெல்கம் குட்டீஸ்....


ஹாய்...ஹலோ...குட்டீஸ்

வெல்கம் டூ குட்டீஸ் ஜங்ஷன்

கண்மணி ஆன்ட்டீ

ஒரு குட்டிக் கதை

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி மனிதன் இருந்தானாம்.

எந்த வேலையும் செய்யாமல் தின்பதும்,தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள்.
வைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல்
ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.

அவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு.சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம்.

சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.

எதற்கு?எப்போது வேர்க்குமென்று.

அப்போது அவன் மனை சொன்னாளாம்'நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்'என்று.

அவனும் தன் துணிகளைத் துவைப்பது,தோட்ட வேலை செய்வது,கடைக்குப் போவது,நிலத்தில் வேலை செய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம்.

ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை.

கொஞ்சநாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.

ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.

மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம்'எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது'என்று.

அதற்கு அவர்'உன் வியாதி மருந்தால் தீரவில்லை.சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குண்மடைந்து விட்டாய்.நான் கொடுத்தது மருந்தேயில்லை.வெறும் துளசி,வெல்லம் கலந்தது' என்றாராம்.

அவனும் நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.

புது வார்த்தை:சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து.

நீதி:சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருந்தால் நோயின்றி வாழலாம்.

கதை பிடிச்சிருக்கா?

ஓகே பை குட்டீஸ்
ஆன்ட்டி

அரும்புகளுக்காக....ஒரு தளம்

ஹலோ குட்டீஸ்!

நான் கண்மணி ஆன்ட்டி!

உங்களுக்கு கதை சொல்ல உங்களுடன் பேச வந்திருக்கிறேன்

கதைகள் ,ஜோக்குகள், குட்டிஸ் உங்களுக்கான செய்திகள் எல்லாம் உண்டு

படிச்சுப் பார்த்துட்டு பிடிச்சிருக்கா சொல்லுங்க.
netoops blog